பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளைந்தால்,தொழிலாளர் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கும்; தோல்வி விளைந்தால், அவர் உள்ளங் கனன்று கொதிக்கும். அக்கொதிப்பு புலியெனப் பாயும்; சிங்கமென உருமும்; புயலென வீசும். இவைகளைப் பொறுமையாலும் அமைதி யாலும் வெல்லுதல் வேண்டும். இதற்கு திருவள்ளுவர் நூலும், கிறிஸ்துவின் மலைப்பொழிவும், இன்ன பிறவும் செய்யுத் துணையை எழுத்தால் எழுதல் இயலவில்லை.*

வேலை நிறுத்தங்கள்போது என்ன நிகழும் கதவடைப் புகள் வரும்; தன்மையும் தீமையும் கலப்படமாக வரும்.

அப்போது திரு.வி.க என் செய்வார்? மூழ்குவார்! ன்.ழுirர்! மூழ்கி விழ எழ பொறுமையும் அமைதியும் பெர்ஷ்ார்.

“வேலை நிறுத்த வேளைகளில் தொழிலாளர் கூட்டத்தில் குழப்பம் இருக்கும்;மேடையில் கலக்கமிருக்கும். யான் கூட்டத்துள் நுழைவேன்; மேடை மீது ஏறி நிற்பேன். பாதி குழப்பங் குறையும். வாய் திறப்பேன். மற்றொரு பாதியும் அடங்கும். உண்மை கூறி வேலைக்குப் போங்கள்’ என்பேன். எல்லாரும் போவர். என்னுள்ளத்தில் படிந்துள்ள பொறுமையும் அமைதியும் தொழிலாளரை இணங் க ச் செய்யும்.”

“பொறுமையும் அண்மதியும் அந்தணச் செல்வ மல்லவோ? அச்செல்வத்தை தொழிலாளர் இயக்கம் வளரச் செங்த்த்ை எனது வாழ்க்கை கண்டது. என் அகத்திலிருந்த கரடு முர்டு மூர்க்கம் முதலிய விலங்கியல்புகளைப் பெரிதும் புரட்டித் தள்ளியது தொழிலாளர் இயக்கம். என்னுள் புர்ட்சி செய்த அவ்வியக்கம் வாழி; அதில் எனது வாழ்க் க்கயை நிறுத்திய ஆண்டவன் அருள் வாழி.*

  • வாழ்க்கைக் குறிப்புக்கள், பக். 583, 584. * வாழ்க்கைக் குறிப்புகள், பக். 585. திரு. வி. க அர்சியல், பத்திரிகை தொண்டுகள் பற்றி திரு. சக்திதாசன் சுப்ரமண்யன் எழுதிய திரு.வி.க வாழ்வும் தொண்டும் படிக்க,