பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தர்மம் தழைக்கச் செய்வதற்காக ஏற்பட்ட போர்களாத லால், அவை அறப்போர்கள்.

புதுமை எப்போதுமே பழமையிலே வேர் கொள்ளும், பழைமை இல்லையேல் புதுமையே இராது; பிறக்கவும் பிறக்காது. எனவே புதுமையின் வழிகாட்டியே பழைமை அல்லது பழமையின் அனுபவம்.

முற்கால இந்திய வாழ்க்கை

மனிதன், இக்காலத்திலே கூடி வாழ்ந்தான்; கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தான்.குடும்பங்கள் விரிந்தன; கிராமங்கள் ஏற்பட்டன. இவ்வாறே கிராமங்கள் பெருகின; ஒன்று சேர்ந்தன.

திராவிட கால நாகரீகம், ஆரிய நாகரீகம்-இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக இருப்பினும்-ஒரே அடிப்படையைக் கொண்டிருந்தன. அதாவது மக்கள் அனைவரும் நலமாக வேண்டும் என்பதே அந்தக் குறிக்கோள். திராவிடர் நாகரீக வாழ்க்கை மேல் நாட்டு தத்துவ ஞானிகள் அரிஸ்டாட்டில், பிளாட்டோ ஆகியோர் தத்துவ அடிப்படையை ஒத்திருந்தன. ஏன்? இந்தியரின் மநுஸ்மிருதி என்ற தத்துவத்திலும், கிரேக்க நாட்டு தத்துவங்களுக்குமிடையே பொதுவான கருத்துக்கள் இருந்ததே அதற்குக் காரணம்: செய்யும் தொழிலுக்கேற்ப மக்கள் வர்ணங்களாக பிரிக்கப் பட்டனர். ஒரே குடும்பத்தில் ஒருவன் ஆசிரியனாக இருப்பின் அவன் ஆசிரியன் என்ற வர்ணத்தைச் சேர்ந்தவன்; அரசர்க்கு பக்க பலமாக வீரனாக இருப்பின் அவன் அரசினன்; வாணிபஞ் செய்யும் அக்குடும்பத்து ஒருவன் வாணிபன்; மற்றவர் தொழிலாளிகள் எனப் பிரிந்தனர் எனவே ஒரே குடும்பத்தில் தொழில் புரிவோர் பொறுத்து வர்ணம் அமைந்திருத்தது. ஒரே குடும்பத்தில் பற்பல வர்ணத்தினர் இருந்தனர். ஆனால் நாளாவட்டத்தில் வர்ணாச்சிரமம், பிறப்பு வழி வர்ணமாகி விட்டது. உயர்வு

1 40