பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாழ்வு உணர்ச்சிகளுக்கு பண்டைய இந்தியாவில் இடமே இல்லை. -

முற்காலத்தில் ஒவ்வொருவருக்கும் சொத்து இருந்தது. குடும்பத் தலைவன் ஒரு குடும்பத்தின் ஆணிவேர்,

வாணிபம்

கடல் கடந்த வாணிபமும் உண்டு. அதுவும் பண்டம் மாற்று முறையைப் பின்பற்றி வாணிபத்தைப் பெருக்கின.

ஊரிலுள்ள ஆலமரமோ, அல்லது ஏதோ ஒரு நிழல் தரும் மரத்தின் அடியிலோ கிராம விவகாரங்களை கவனிப்பர். ‘நீர் நிலைகள், ஆடு மாடுகள் முதலியன மேயுமிடங்கள், சுடுகாடுகள் ஆகியன பொதுவானவை. எவரும் அவைகளை நுகரலாம். கூடி வாழும் அறமே கிராமமாகக் காட்சியளித்தது.”*

மெகஸ்தினிஸ் போன்ற அயலாரின் குறிப்புகள் இதனை ருசுப்படுத்துகின்றன.

அக்காலத்திலே படையெடுப்புகள் உண்டு. ஆனால் அவைகள் கிராமங்களையோ பயிர்த்தொழிலையோ பாதிக்க வில்லை.

நல்ல முறையில் மன்னராட்சியும் நடைபெற்றது. இதற்கு உதாரணமாக அமைகிறது. மெளரிய ஆட்சி. அதிலும் இடைவிடாது நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்த அசோகனது ஆட்சி சாலச் சிறந்தது. நாட்டில் தர்மம் இருந்தது. எங்கும் சாந்தி நிலவியது.

புதிய மார்க்கங்கள், புதிய கருத்துக்கள், புதிய சிந்தனைகள் எங்கும் தோன்றின.

சமயக் கலைகள் இந்தியாவின் உயிர் நாடி ஆயின், சமரச சன்மார்க்கம் என்ற சொல் வழக்கில் இருக்கவில்லை.

• . Rangachari.

141