பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதலின் பூசலுக்குக் காரணம் மத தர்மமற்ற மூர்க்கமே யாகும். முர்க்கத்தை மதமாகக் கொள்வது தவறு.”*

ஹர்ஷர் காலத்திற்குப் பின் வகுப்பு வேற்றுமைகள் புகுந்தன. பிறப்பு வழி வகுப்பு வேற்றுமைகள் பிறந்தன; பரவின; இந்துக்களிடையே புரையோடின. இந்து மதம் நாளாக நாளாக சாதி மதம் ஆகியது.

ஜைனத்தின் நிலை

சீவகாருண்யத்தை (அஹிம்சை) ஆணி வேராகக் கொண்ட ஜைனம் முதன்முதல் வளர்ந்தது. வகுப்பு வாதங்கள் முதலிலில்லை என்று திகம்பரர், சுவேதம்பர் என்ற இரு பிரிவுகளாக ஜைனம் பிரிந்ததோ, அன்றே புகுந்தது வகுப்பு வாத போராட்டம். ஜைன சமயத்தின் ஆணி வேரை இந்தப் பிணக்கு அசைக்கத் தொடங்கிய க மதத்தின் சாரம் குறைந்தது. பிந்திய விளைவு என்ன . இருக்கும் என்று நீங்களே ஊகிக்கலாம். புத்த மதம்: ஆக்கம் குன்றல்

அது சரி, ஜைனத்தின் நிலைதான் இது என்றால், உலகில் பல பக்கங்களிலும் பரவிய பெளத்த மதம் ஏன் மயங்கியது. அன்பு சமயமாக பெளத்தம் இருந்தவரை அது வளர்ந்தது. சங்கங்கள், மடங்கள், சந்நியாசிகள் தோற்று விக்கப்பட்டவுடன் புத்தரின் பிரசாரத்திற்கும் அவர் வழித் தோன்றல்கள் பிரசாரம் செய்த நாத்திகத்திற்கும் வெகு தூரம், வெகு தூரம்! எனவே, தான் பிறந்த நாட்டிலேயே பெளத்தம் ஆக்கம் பெறாதொழிந்தது.

இந்து மதம் சாதி மதமாக இருந்திருந்தால் கூட பரவா யில்லை. சம்பிரதாயங்களையும் சந்நியாசத்தை வலியுறுத்தும் மதமாக மாறியதே அதன் போதாத காலம். சந்தியாசிகள் என்ன செய்தனர்? தீண்டாமை, பெண்ணடிமை ஆகிய

  • இந்தியாவும் விடுதலையும், பக். 87.

1 4 3