பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்தனராம். அப்பிரசங்கங்களைக் கேட்டுக் கேட்டு துளசி தாஸ் ஹிந்தியில் இராமாயணம் எழுதினாரென்று டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் கூறுகிறார். ஆக தமிழ்க் கருத்துக் களுக்கு அக்பர் ஆட்சியில் இடம் இருந்ததென்று தெரிகிறது.*

இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக தூணாக இருந்த அக்பரின் ஆட்சி நீடித்திருக்குமாயின், இந்தியா அனைவரும் வியக்கக்கூடிய நாடாக இருந்திருக்கும்.

ஆங்கிலேயர் வருகை

அக்பருடைய மைந்தர் ஜஹாங்கீர் அரசு செலுத்திய போதுதான் இரு ஆங்கில துர்துவர் வந்தனர். இங்கிலாந்து மன்னர் முதலாவது ஜேம்ஸ் ஆங்கிலேயர் இந்தியாவில் வாணிபம் செய்ய அனுமதி கோரினார். அப்பணியை மேற் கொண்டு தூதுவராக வந்தவர்களில் ஒருவர் காப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ்; மற்றவர் ஸர் தாமஸ் ரோ என்பவர். அனுமதி கிடைக்கப் பெற்ற முதல் ஆங்கிலேயர் களும் அவர்களே.

ஷாஜகான்-கலைப் பித்தர். மொகலாய பேரரசின் பொற்காலமாக அமைந்ததில் வியப்பேது? ஆனால் அவுரங்க சீப் காலமோ, ஓங்கி, அடர்ந்து வளர்ந்த ஆலமரம் போன்ற மொகலாய பேரரசை, தன் பிடிவாதத்தால் வெட்டி வீழ்த்தக் கூடியதாக அமைந்தது ஒரு பெருங் குறையே. அரியணைக்காக சூழ்ச்சிகள் ஒரு பக்கம்; குறுகிய சமய வெறி மறுபக்கம்; இஸ்லாமியர்களிடையே வியா, சுன்னி என்ற வகுப்புப் பேதங்களைப் புகுத்தி, இந்துக் களிடையேயும் முஸ்லீம்களிடையேயும் ஒற்றுமையைச் சுக்கு நூறாக சிதைத்தது; உடைத்தது! அத்துடனா? கஜானாவும் காலியாகியது.

வகுப்பு வெறியின் எதிரொலி மராட்டிய நாட்டில் ஒலித்தது. வீரசிவாஜியாக உருவெடுத்தது; சீக்கியர் பகை

  • திரு.வி.க, இந்தியாவும் விடுதலையும், பக். 107.

145