பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நாடு கைப்பற்றும் யுக்தி முன் டல்ஹெளஸி செய்த சீர்திருத்தங்கள் மறைந்தன. வலுக்கட்டாயமாக புகுத்தப்பட்டது மேல் நாட்டுக் கல்வி முறை. இதில் ஏதேனும் தவறு உண்டோ? நிச்சயம் உண்டு. கூலி உத்தியோகத்திற்காக ஒட்டாத, இந்த நாட்டிற்கு ஒவ்வாத கல்வி முறையைப் பயில, விரைந்தது முன்னணி'க் கூட்டம். ஏனைய இந்தியரிடம் இருந்த கொஞ்ச நஞ்ச பழைய வாசனையையும் விரட்டியடித்தது இக்கல்வி முறை. இந்தியப் பண்பாடோ விரைந்தோடி எங்கோ மறைந்தது.

இராணுவ சீர்திருத்தமும் விளைவும்

சிப்பாய்களிடையே புகுத்தப் பட்டன புதிய தோட்டாக்கள்: இவைகளுக்கு கொழுப்பு பூசப்பட்டிருந்தது. வாயினால் பற்றி இழுத்தால்தான் இவை வேலை செய்யும், இதில் இந்து ராணுவத்தினருக்கும் அதிருப்தி. முஸ்லீம் சிப்பாய்க்கும் அதிகமான வெறுப்பு. இந்த கொழுப்பைப் பற்றிய உண்மையை இரு சாராரும் அறிந்த பின் அது இன்னும் மிகைப்பட்டது.

வலுக்கட்டாயமாக மத மாற்றங்கள் செய்யப்பட்டன. இவை மட்டுமா சிப்பாய்கள் பொறுமையை சோதித்தன? இல்லை, இல்லை! &

சிறுமை கண்டு சீறியது இந்தியனின் உள்ளம். எங்கே? பட்டாளத்தில். ஆங்கிலச் சிப்பாய்க்கு மூன்று மடங்கு அதிக மான ஊதியம். இந்தியனுக்கு மிக மிகக் குறைவு. மிக இழிவாக நடத்தப்பட்ட இந்தியச் சிப்பாய்களின் இழி நிலை கண்டு தாய்க்குலம் பொங்கியது. வெறி கொண்டது. பாக்பூரில் கேவலமாக, எக்குற்றமும் இன்றியே ஒரு இந்திய சிப்பாயை ஆங்கில தளபதி நடத்தியதைக் கண்டது! எரிகின்ற இந்நெருப்பிலே எண்ணெய் விட்டது போலாயிற்று,உருத்திரக்காளி கோர நடம்புரியத் தயாராகி விட்டாள்!”

  • வீர சாவர்காரின் 1857 பார்க்க.

A 440–10 1 49