பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறித்த நாளில் நாடு முழுவதும் ஆங்கிலேயரை எதிர்ப்பது என்று திட்டமிடப் பட்டது. என்னே துரதிர்ஷ்டம் பரத்பூர் நிகழ்ச்சி எழுச்சியை ஒரு நாள் முன்னதாகவே தூண்டி விட்டது! ஏன் அவ்வாறு நடந்தது? பெண்கள் தங்கள் வளையல்களைக் கழற்றிக் கொடுத்து, சிப்பாய்களை அணியச் சொன்னால், ஆண்மைக்கு பொறுக்குமோ? முன் தினமே எழுச்சி, எழுச்சி! முதல் சுதந்திரப் போர்

ஒரு சில இடங்களில் மட்டுமே எழுச்சி! ஒரே சமயத்தில் எல்லா இடங்களிலும் திட்டமிட்டபடி எழுச்சி இல்லை. ஆங்கிலேயர்களுக்கு (இந்த எழுச்சியை சுலபமாக அடக்க அவகாசம் கிடைத்தது. சுதந்திரப் போரின் தலைவர் களான ஜான்சி ராணி லக்ஷ்மிபாய், தாந்தியா தோபி ஆகியோரைச் சூறையாடி அழித்தனர். சிப்பாய்கள், ஐரோப்பிய பெண்களைக் கொன்று குவித்ததாக ‘இந்தியாவும் விடுதலையும் நூலில் கூறப்படுகிறது. ஆனால் வீரசர்வர்க்கார் எழுதிய 1857 என்ற வரலாற்று நூலில் இதற்கு மாறான விவரம் ஆங்கிலேய தளபதி களாலேயே எழுதப்பட்ட செய்தி இருப்பதைக் காண் கிறோம்.

இந்த சுதந்திர எழுச்சியை அராஜகமாக அடக்கிய ஆங்கிலேயருள் ஒருவர் நீல்.’

ஆங்கிலேயருக்கு எழுச்சியை அடக்கப் பேருதவி செய்தவர் நைஜாமும், சீக்கியருமே. என்ன செய்யலாம்! இவர்களும் இந்தியரே! எழுச்சியும் முடிவும்

எழுச்சியின் முடிவு என்ன? வா னி ப ரா ட் கி முடிவடைந்தது. இங்கிலாந்தின் அரசியார்-விக்டோரியா * இந்த நீல் தளபதிக்கு சிலை வைக்கப்பட்டது. பிற் காலத்தில் இச்சிலையை அகற்ற ஏற்பட்டதே நீலி சத்தியாக்கிரகம்.

I 50