பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம க | ர | ணி ய | ர் இந்தியாவுக்கு அரசியானார். ஒர் அறிக்கையும் வெளியிட்டார். அந்த அறிக்கை மூலம் இந்தியருக்கு சமய சம்பிரதாயங்களில் ஆங்கிலேயர் தலையிடு இராது என்று உறுதி கூறினார். இந்தியர்களை ஆங்கிலேய ருக்கு சமமாக நடத்துவதாகவும் கூறப்பட்டது. இனி இந்தியர்கள் பாரபட்சமாக நடத்தப்பட மாட்டாரென்றும் அறிவுறுத்தப் பட்டது.

கவர்னர் ஜெனரல் இராஜ பிரதிநிதியானார்,

இராஜ பிரதிநிதிகளுள் இந்தியர் மனத்தில் நீங்கா இடம் பெற்றவர் லார்ட் ரிப்பன் பிரபு, அவருடைய தில சுய ஆட்சி முறை இந்தியருக்குச் சிறிது மகிழ்ச்சி தந்தது.

கர்ஜான் பிரபுவை இந்தியர் மறக்க மாட்டார். இது உறுதி. ஏன்? அவரே இந்தியாவில், இந்திய மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர். அவர் செய்த வித்து) பிரிவினை, மக்களை மேன்மேலும் கவனமாக இருக்கத் துாண்டியது,

இந்திய நாட்டில் இப்போது பஞ்சம், பசி, பட்டினி தாண்டவமாடியது. முன்னர் இருந்த செல்வம் எல்லாம் எப்படி வற்றியது? இயற்கைச் செல்வங்கள் எங்கே போயின?

செல்வம் வற்றவில்லை. சுரண்டப் பட்டது! எங்கும் சுரண்டல், சுரண்டல், சுரண்டல்! இயற்கைச் செல்வங்கள் நமக்கு பயன்படாது ஒழிந்தன. இந்த வறுமை நிலைப் பற்றி எங்கும் பேச்சு! ஆனால் நிலை மாறியதோ? இல்லை! இல்லை!

- ஏழை இந்தியன் வாடினான்: வெள்ளையன் வளர்ந் தான்: கொழுத்தான்.

கிராமத் தொழில்கள் நசிந்தன; மற்றவை நசுக்கப் பட்டன. வரிகள் சுமத்தப் பட்டன. நெய்தல் தொழில்”

1 5 I