பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நொந்து போயிற்று. பட்டுத் தொழில் படாத பாடு பட்டு, பட்டுப் போயிற்று.

ஐரோப்பியர் உற்பத்தி செய்த பொருட்களுக்கு ஒரு திறந்த வெளி சந்தையாக மாறி வந்தது இந்தியா.

செல்வ இந்தியா என்ற சாறு நிறைந்த பழத்தின் சாற்றை உறிஞ்சி விட்டு, வெறும் சக்கையாக்கியது இங்கிலாந்து. இதில் தன்னை வளர்த்துக் கொண்டது இங்கிலாந்து.*

இரயில் பாதை பஞ்ச காலத்தில் உதவியது என்பது உண்மையே. இருந்தாலும் எழுச்சியை அடக்கி, ஒடுக்கி, அழிக்கப் பயன்பட்டது போல் அவ்வளவு பயனை மற்றவை களுக்குத் தரவில்லை. சுரண்டலுக்கு அதுவும் ஒரு கருவியாயிற்று.

வரிப் பணம் வசூலித்தார்களே? அது என்னவாயிற்று? வரிப்பணத்தில் ஒரு கணிசமான பகுதி இராணுவத்திற்கும் இராஜபிரதிநிதி ஆகியோர்களுக்கும் மற்று அரசாங்க ஊழியர்களுக்கும் சம்பளமாக செலவாகியது. ஆங்கிலேய னுடைய ஒரு நாளைய வருவாய், இந்தியனுடைய ஒரு மாத வருவாயாக ஆகியது.

ஆங்கிலக் கல்வி பரவியது. அடிமை ஊழிய மோகத்தை மேன்மேலும் வளர்த்தது. கல்வியின் நோக்கம் இதுவோ? விதேசி கல்வி சுதேசியை விரட்டி விட்டது. கிராமங்கள் அழிந்தன. சாதி வெறியைத் தூண்டிப் பற்பல சாதகங்கள் செய்துக் கொள்ளப்பட்டன.

தீண்டாமை-தீரா நோய்

தீண்டாமை ஒரு தீரா நோய். அதைத் தீர்ப்பது எப்போது? இதைத் தீர்க்கத்தான் எடுக்கப்படும் முயற்சிகள்

ஆதாரம்-டிக்பி 183-இந்தியாவும் விடுதலையும்.

1 52