பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த பிளவை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.

பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராயை நாடு கடத்

தியது. அவர் தீவிரவாதி, நாடு கடத்தினாலும், சிங்கம் சிங்கம் தானே!

திலகருக்கு இதனால் ஆதரவு குறைந்ததா? இல்லை, இல்லை! வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, சுப்ரமணிய பாரதி, சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோர் திலகர் கட்சியின் துரண்கள் ஆயினர்.

தீவிரவாதி மிதவாதி போராட்டம் வகித்தது 1907-ல் சதிகள் உருவாயின.

சதியின் விளைவு

திலகருக்கு எதிராக அதிகார வர்க்கத்துடன் சேர்ந்து

கொண்டது மிதவாதிகள் தலைமை! குறிக்கோள்தான்

என்ன?

தீவிரவாதிகளை ஒடுக்கி, அழித்து, தொலைத்துவிடவே!

முடிந்ததா? ஆஹா, முடிந்ததே! தேசபக்தர் திலகரை நாடு கடத்தியது!

விபின் சந்திர பாலரை சிறையில் அடைத்தது!

அராஜகம் கண்ட இளம் உள்ளங்கள் வெறி கொண்டன; சீறி எழுந்தன. எங்கும் கொலை, கொலை, கொலை!

சிறைகள் நிரம்பி வழிந்தன.

கட்டுக்கடங்காத உணர்ச்சி வெள்ளத்தை, சுதந்திர தாகத்தை அடக்க நாடெங்கும் அடக்குமுறை:அடக்குமுறை!

சுப்ரமணிய பாரதியையும் அரவிந்தரையும் கூட சிறையி லடைக்கத் திட்டமிட்டது அரசு.

I 56