பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால் நடந்ததென்ன? அரவிந்தர் புதுவை புகுந்தார். சுப்ரமண்ய பாரதி புதுவை புகுந்தார்!

திட்டம்! மண்ணாகியது.

‘உரிமை இழந்த நாட்டில் பணக்காரரும், முதலாளி களும், அதிகார வர்க்கமும் ஒன்றுபட்டு உண்மைத் தேச பக்தர் முயற்சிக்குப் பல வழியிலும் கேடு சூழ்ந்து வருதல் இயற்கையாய் விட்டது. பணக்காரரும், முதலாளிகளும் தேசபக்தர் வேடம் பூண்டு, நன்கு நடித்து, உலகை ஏமாற்றுவது வழக்கம்; ஏமாறுவதில் நமது நாடு முதன்மை யாக நிற்பது.”*

பின்னர் மிதவாதிகளின் செல்வாக்கு ஓங்கியது. எதிர்ப்பை ஒடுக்கிய ஆங்கிலேயர் என் செய்தனர். தலை நகரை மாற்றினர். இதுவரை தலைநகர் கல்கத்தா. ஆனால் இனி? டில்லி தலைநகர் ஆகியது, மிதவாதிகளுக்கு இதைக் காட்டிலும் பெரிய மூக்கறுப்பு ஏது?

காங்கிரலாக்கு புத்துயிர்

அன்னி பெஸண்ட் அம்மையார் ஐயர்லாந்து (ஐரிஷ்) நாட்டைச் சேர்ந்தவர். இந்தியாவுக்கு வந்தார்.நம் நாட்டில் விடுதலைக்காக நடந்த போராட்டத்தில் அனுதாபங் கொண்டார். அவரே காங்கிரஸுக்கு புத்துயிர் ஊட்டினார் என்றால் மிகையே அன்று! திலகரும் சிறையிலிருந்து வெளிப் போந்தார்.

அன்னி பெஸண்டின் பத்திரிகைகள் இரண்டு. ஒன்று நியூ இந்தியா. மற்றொன்று ‘காமன் வீல்’ என்பது. இரண்டும் இந்தியாவின் உரிமைக்காகப் போராடின.

பம்பாயில் 30-வது காங்கிரஸ் சபை கூடியது. அப்போது அன்னி பெஸ்ண்ட் உரிமை முழக்கம் செய்தார்.

  • இந்தியாவும் விடுதலையும்’, பக், 293,

157