பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்போது இராஜப் பிரதிநிதி லார்ட் செம்ஸ்போர்ட் அவர் கையொப்பமிட்டு, தன் இலச்சினை பொறித்தால் தான் அந்த மசோதா சட்டமாகும். மகாத்மா காந்தி இராஜப்பிரதிநிதியை சந்தித்தார்.இம்மசோதாவில்'இராஜப் பிரதிநிதி இலச்சினை பொறியாது விடுதல் நல்லது’ என்று விண்ணப்பித்துக் கொண்டார். லார்ட். செம்ஸ்போர்ட் மகாத்மாவின் விண்ணப்பத்துக்குச் செவி சாய்த்தாரில்லை.*

மகாத்மா என்ன செய்தார்? நாடு முழுவதுஞ் சுற்றிச் சுற்றிச் சத்தியாக்கிரகத்துக்கு நாட்டைப் பயிற்சி பெறச் செய்தார். சத்தியாக்கிரகம் தொடங்குவதற்கு முன்னர், நாட்டின் நிலையைச் சோதிக்க வேண்டி, சத்தியாக்கிரக முறையில் ஒருநாள் கொண்டாடப்பட வேண்டுமென்று, ஒரு அறிக்கை விடுத்தார்.” ஏன்? தம் பயிற்சியால் மக்கள் எவ்வளவு பண்பட்டிருக்கிறார்கள் என்று அறிதற் பொருட்டே.

பஞ்சாப் படுகொலை

காந்தியடிகள் விரும்பியவாறு சத்தியாக்கிரக நாள் எங்கும் கொண்டாடப்பட்டது.முக்கியமாக பாஞ்சாலம் மிக சிறப்பாகக் கொண்டாடியது.

என்ன விளைவு?

பாஞ்சாலத்தில் அடக்குமுறை தலைவிரித்து ஆடியது.

இராணுவ ஆட்சி மக்களை அச்சுறுத்தியது. ஜாலியன் வாலாபாக்கில் கூடிய பாமர மக்கள் கூட்டத்தைச் சுட்டுத் தள்ளின ஆங்கில பீரங்கிகள். ஜாலியன் வாலாபாக் மிஷின்

துப்பாக்கிகளுக்கு அநியாயமாக இரையான ஒன்றுமறியா ஆண்மக்கள் எத்தனை எத்தனை! பெண் மக்கள் எத்தனை,

  • முன் குறிப்பிட்ட நூல், பக். 308, பக். 310.
3 3 3 2 3

I 60