பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஜாலியன்வாலாவில் பாரத மக்களைச் சுட்டுச் சுட்டுக் கொன்ற டையர் முதலியோரை அவ்விடத்திலேயே பழி தீர்க்கவன்றோ தீர்மானம் நிறைவேற்றல் வேண்டும்?”

என்று மாண்ட்போர்ட் சீர்திருத்தத்துக்கு நன்றியுங் கூற முயன்றவரை கேட்டாரே, அது மக்களை மென்மேலும் உரிமை வேட்கை கொள்ளச் செய்யாதோ?

1920 இல் திலகர் அமரரானார்.

சத்தியாக்கிரகம்

காந்தியடிகள் இந்திய நாட்டு உரிமைக்காக நடத்திய சத்தியாக்கிரகங்கள் பல பற்பல. அவைகளுள் சிறந்தவை இரண்டே என்கிறார் திரு.வி.க. இரண்டும் நாட்டின் விடுதலையைக் குறிக்கொண்டு நிகழ்ந்தவை.

1921-ல் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போரால் நாடு முழுவதும் விழிப்புற்றது. பல்லாயிரக் கணக்கான மக்கள் சிறை புகுந்தார்கள்.

1921-இரட்டை ஆட்சி ஏற்படுத்திய மாண்ட்போர்டு சீர்திருத்தத்தை ஒட்டி அமைந்த சட்டசபை திறப்புவிழா. இந்த விழாவை நிகழ்த்தப் போந்த கன்னாட் பிரபுவை இந்தியர் வரவேற்கலாகாது என்ற காந்தியடிகளின் அன்புக் கட்டளையை நாடே. ஏற்றது.

அதே போல் 1930-ல் இந்தியாவை வேல்ஸ் இளங்கோ காண வந்தார். இந்திய மக்கள் இளங்கோவை வரவேற் றனரா? இல்லை, இல்லை! பெரியதொரு சாம்ராஜ்யத்தின் வாரிசை புறக்கணித்தது ஏன்? காந்தியடிகளின் அன்புக் கட்டளையின் சக்தியே அதைச் செய்யத் தூண்டியது,பலம் பொருந்திய ஒர் பேரரசை, ஒரு உண்மை யோகி எவ்வாறு துச்சமாக ஆக்கி விட்டார் பார்த்தீர்களா?

I 62