பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரஸுக்குள்ளே சுயராஜ்யக் கட்சி தோன்றியது. இதை தோற்றுவித்தவர் தேச பந்து தாஸ் அவர்கள்.

காந்தியடிகள் சுத்த சுயராச்சிய தீர்மானத்தை ஏற்றார் இல்லை.

பல காங்கிரஸ் மகாநாடுகள் கூடின.

(ஸர். ஜான்) சைமன் கமிஷன்

மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தத்தை இந்தியா செயல்படுத்திய விதத்தையும், மேற்கொண்டு செய்ய வேண்டியது யாது என்று நேரிற் சென்றறிய ஜான் சைமன் தலைமையில் ஒரு விசார ைனக் கூட்டம் இந்தியாவுக்கு வந்தது. இதனுடைய விசாரணையில் காங்கிரஸ் பங்கு கொள்ளவில்லை. சைமன் கமிஷன் அறிக்கையையும் சமர்ப்பித்தார்.

இரண்டு முறை வட்டமேஜை மகாநாடு கூடிற்று. இரண்டாம் வட்டமேஜை மகாநாட்டிற்குள் காந்தி-இர்வின் உடன்படிக்கை நிறைவேறினமையால் அம்மகாநாட்டில் காந்தியடிகள் கலந்து கொண்டார்.

இதன் பலனாக 1935-ம் ஆண்டு இந்திய அரசியல்

சீர்திருத்தச் சட்டமாக நிறைவேறியது. அதன்படி ஒருவித மாகாண சுய ஆட்சி வழங்கப் பட்டது.

1937-தேர்தல்

புதிய அரசியல் சீர்திருத்தத்தை ஒட்டி தேர்தல் நடை பெற்றது. காங்கிரஸுக்கு பெருமிதமான வெற்றி. முதலில் பதவி ஏற்பதா வேண்டாமா என்ற தயக்கம் கொண்டது காங்கிரஸ். பின்னர் ஒரு நிபந்தனை மீது காங்கிரஸ் பதவி ஏற்றது. நிபந்தனை யாது? மந்திரிமார் கடனாற்றும்போது, அவர்தஞ் செயலில் கவர்னர் குறுக்கிட்டு தொல்லை விளைத்தலாகாது என்பதே நிபந்தனை.

I 63