பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரஸ் பதவி ஏற்றது

இரண்டரை ஆண்டு பல மாகாணங்களில் காங்கிரஸ் சார்பில் ஆட்சிமுறை நடைபெற்றது. ஆனால் பொது மக்களுக்கு ஏமாற்றம்! ஏமாற்றம்! பெருத்த ஏமாற்றம்! நாடு எதிர்பார்த்தபடி ஆட்சி நடைபெறவில்லை.

இந்தக் குறைக்கான காரணங்கள் சிலவற்றை அரசியல் ஞானி திரு.வி.க குறிப்பிடுகிறார்.

அபேட்சகர்களது தேர்வு-முறை முதலில் ஆராயப் படுகிறது. அபேட்சகரைத் தெரிந்தெடுத்ததில் காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டு நேரிய முறையில் கவலை செலுத்தவில்லை. போரில் தலைப்பட்டு சிறை புகுந்தவர்க்கு சிறப்பளிக்க கருதி, தகுதி, அரசியல் ஞானம் இல்லாதவரை அபேட்சகராக்கினால் பொறுப்பு உணர்ந்து ஆட்சி செய்ய முடியுமோ?

அதுமட்டுமா, இத்தகையோர் அரசியல் ஞானியரின் உதை பந்தாகா விட்டால் பதவி நிலைக்காதே! எனவே அரசியல் ஞானியரின் தன்னலத்திற்குப் பயன்படும் பொம்மை யாயினர் இவர்கள்.

காங்கிரஸ் தான் வகுப்பு வாதத்திற்கு அப்பாற்பட்ட தென்பதை மறந்தது. வகுப்புவாதம் தேர்தலில் மாபெரும் இடம் பெற்றது. இது ஒரு தவறு; தவறு என்றால் சாதாரண தவறல்ல; நாட்டின் ஒற்றுமையைத் தொலைக்கக் கூடிய தீய சக்தி,

இந்தப் பதவியிலிருந்தவர்க்கு சம்பளம் கொடுக்கத் தீர்மானித்தவுடன், பதவி மோகம் அனைவரையும் உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டது.

அது மட்டுமா? மந்திரிமார், காரியதரிசி, மற்ற சட்டசபை அங்கத்தினர் காங்கிரஸில் பொறுப்பான பதவிகள் இன்னமும் ஏற்றிருந்தது-முறையாக இல்லை.

I 64