பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

திரு. வி. கவின் உரைநடைச் சிறப்பு

திரு. வி. க ஒரு பெரிய கடல்; பரந்த தமிழ்க் கடல்: ஆங்கிலம், வட மொழி, மற்றும் பிற மொழிகளிலும் ஆழ்ந்த அறிவு பெற்றவர். சமயங்களில் தேர்ச்சி பெற்று, ஆராய்ந்து அலசி உண்மைகளை உணர்ந்தவர்; சன்மார்க்கத்தின் கலங் கரை விளக்கு: அரசியலில் ஈடுபட்டாலும் நேர்மை தவறாது, கடைசி மூச்சுவரை நாட்டு நலன் பற்றிய ஒரே சிந்தையிலிருந்தவர்; அதற்காக தியாகம் பல, எவ்வித விளம்பரமுமின்றி செய்தவர். தமிழ்நாட்டில் பத்திரிகை உலகுக்கு ஒர் ஒப்புவமையற்ற வழிகாட்டி; தொழிலாளர் நலனே, நாட்டின் நலன்’ என்ற அரும்பெறும் உண்மையைக் காட்டி, தொழிலாளர் இயக்கத்தை இங்கு உருவாக்கி, நடாத்தி, அதை வேரூன்றச் செய்த பெருந்தகையாளர். பெண்கள் விடுதலை தளபதி, கற்றதை கடைப்பிடித்து வாழ்ந்து காட்டிய தமக்கென வாழா பிறர்க்குரியவர் திரு. வி. க அமரரான இவரை காண்பதெப்படி?

காணலாம்; நிச்சயம் காணலாம், எழுத்தாளர்கள் அமரரான பின்னர் உலகில் வாழ்வர். எப்படி? அவர் தம் நூல்களே அவர்கள் உயிர்; அவர் தம் எழுத்துக்கள்-அவர் தம் உள்ளம்: அவர்தம் எழுத்தோவியங்களை ஆராயும் சான்

4