பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறல் வேண்டும் என்றும் வற்புறுத்தியது. அது மட்டுமா? அதுவரை மந்திரிமார் பதவி வகிக்கலாகாதென்றும் தீர்மானம் செய்தது.

ஜின்னா அடிக்கடி இராசப் பிரதிநிதியை சந்தித்தார். அவர் உறுதி கூற இயலாமையைத் தெரிவித்தார்.

‘காங்கிரஸுக்கு உள்ளும் புறமும் குழப்பமிராவிடின் பிரிட் ஷ் அரசாங்கத்தின் விடை வேறு விதமாக பிறந் திருக்கும்.*

இதைத் தீர்ப்பது எப்படி? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

தொழில் இயக்கம்

நாட்டின் முதுகெலும்பு பொருள் வளம், பொருள் வளம் வேண்டுமானால் சுரண்டல் நிறுத்தப்படல் வேண்டும் சுரண்டல் நிறுத்தப் பெறுதற்கு அரசியல் விடுதலை தேவை.

அரசியல் விடுதலையின் உயிர்நாடி பொருளாதார விடுதலை, பொருளாதார உரிமை என்பதும் தொழிலரசு என்பதும் ஒன்றே: தொழிலாளர் சுயராஜ்யம் என்றோ சமதர்ம ஆட்சி என்றோ சொல்லப்படுவதும் அஃதே.

பொது மக்கள் நல்லவர்கள். மிகவும் நல்லவர்கள். அதில் ஐயமேதும் இல்லை. ஆனால் தம்மையறியாமலேயே பூசல்களில் சர்க்கப்படுவர்: ஈடுபடுத்தப்படுவர். இங்கனம் அவர்களை ஈர்த்து ஈடுபடுத்துபவர் யார்? பணக்காரர்களும் படிப்பாளிகளுமே! எனவே சூழ்ச்சிக்காரர்களால் கைப் பாவையாக ஆட்டப்படும், இப்பொதுமக்களுக்கு அரசியல் சட்டம் தெளிவாக புரியுமா? இல்லை, நன்மைதான் செய்யுமா? செய்யாது!

சுயராஜ்யம் முதலாளிகளுக்கு மட்டுமல்ல; தொழிலா ளர்க்கும் தேவை. தொழிலாளரின் இரத்தமே முதலாளிக்குப்

  • இந்தியாவும் விடுதலையும், பக். 332.

I 67