பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது தவிர, வேறு பல சங்கங்கள் சென்னையிலும் வெளி யூரிலும் காணப்பட்டன. அவைகளுள் குறிப்பிடத் தக்கவை எம் அண்ட் எஸ். எம் தொழிலாளர் சங்கம், டிராம்வே சங்கம், மின்சார தொழிலாளர் சங்கம், மண்ணெண்ணெய் தொழிலாளர் சங்கம், அச்சுத் தொழிலாளி சங்கம், அலுமினியம் தொழிலாளர் சங்கம், ஐரோப்பிய வீட்டு தொழிலாளர் சங்கம், நாவிதர் சங்கம், தோட்டிகள் சங்கம், போலீஸார் சங்கம், தென்னிந்திய இரயில்வே தொழிலாளர் சங்கம், கோவை நெசவு தொழிலாளர் சங்கம், மதுரை நெசவு தொழிலாளர் சங்கம் ஆகியன.

தென்னிந்தியாவிலிருந்து பறந்த தீப்பொறி, வட இந்தியாவில் விழுந்தது; பற்றிக் கொண்டது. அங்கும் பல தொழிற் சங்கங்கள் தோன்றலாயின.

இங்கிலாந்து, இந்தியா ஆகிய இரு நாடுகளின் பண்பாடு களின் ஒவ்வாத கலவையாக இருந்தது ஒர் பண்பாடு அதனை பின்பற்றியவர் ஆங்கிலோ இந்தியர். இவர்கள் என்ன செய்தார்கள்? எம் அண்ட் எஸ் எம் தொழிலாளர் கூட்டத்தில் கல்மாரியும் மண்மாரியும் பொழிந்தனர் ஆங்கிலோ இந்தியர். தொழிலாளர் திரண்டு வந்தனர். அவ்வளவே. மூர்க்கர்கள் வேகமாகப் பறந்தனர்.

இத்தகைய தொல்லைகள் ஒன்றா, இரண்டா? பல பல, பல பல!

தொழிற்சங்கத் தொடக்க சேவை

தொழிற்சங்க சேவை தொடக்கத்தில் ஒருவித சமுதாய ஊழியமாகவும், சீவகாருண்யத் தொண்டாகவுமே கொள்ளப் பட்டது. சங்கக் கூட்டங்களில் சம்பள உயர்வு கேட்கப் பட்டது; வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரப்பட்டது;இராப் பாடசாலைகளை அமைக்க வேண்டும் என்றும், சுகாதார வசதிகள் தர வேண்டும், இன்ன பிறவுமே பேசப்படுவது வழக்கம். -

I 0.9