பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதவடைப்பு-வேலை நிறுத்தம்

கதவடைப்பும் வேலை நிறுத்தமும் அடிக்கடி நிகழ்ந்தன. ‘இவை சமதர்ம படலத்தின் ஒரு சிறு பகுதி என்பது என் எண்ணம் ’’

முதலாளியிள் அடக்குமுறையும், தொழிலாளர் வேலை நிறுத்தமும் பெருகப் பெருகச் சமதர்ம உணர்வு தொழி லாளரிடையே தானே தோன்றும் என்பது திரு. வி. கவின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இதை அவர் வெளியிட்டாரா? இல்லை! இருந்தும், அக்காலத்திலே வந்த எதிர்ப்புகள் எத்தனை எத்தனை! கண்டித்து எழுதிய பத்திரிகைகள் எத்தனை:

இதனால் இயக்கத்திற்கு ஆதரவாளர் குறைந்தனரோ? இல்லை. நியூ இந்தியா இதழ் எதிர்ப்புக்கு மறு சூடு கொடுத்தது. அதே போல், தேசபக்தனும் தொழில் இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்தது. இயக்கம் தளர்ச்சி கொள்ளவில்லை! சோர்வும் அதனை பற்றவில்லை வீறு கொண்டும், நம்பிக்கையோடும் செயல்பட்டது. எச்சரிக்கை களுக்கும் பஞ்சமில்லை.

இவைகளைக் கண்டு இயக்கம் அஞ்சவில்லை. மத் திய சங்கம்

எல்லா தொழிற்சங்கங்களுக்கும் நடுநாயகமாக மத்திய சங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. முதல் மாகாணத் தொழிலாளர் மகாநாடு முதன் முறையாகவும் கூடியது. திரு. வி. க தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார் வற்புறுத்தப்பட்டார் என்பதே மறுக்க முடியாத உண்மை.

சங்கத்தின் ஒற்றுமை முதலாளிகளை மட்டுமல்ல’ அதிகாரிகளையும் நடுங்க வைத்தது. ஏன்?

  • திரு வி. க. இந்தியாவும் விடுதலையும்’, பக். 351.

J 70