பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றோர் கூட்டமே அவர்தம் வாரிசு. எழுத்து என்றும் வாழும்: வாழ்ந்து கொண்டேயிருக்கும்; அதற்கு முடிவே கிடையாது. அதனை உலகினிற்கு தந்தவரோ, நாடுகள் அழிந்தாலும், மக்கள் இனம் உள்ளவரை வாழ்ந்து கொண்டேயிருப்பர் என்பது மிகையன்று. அதே போல தான் திரு.வி.க.வும் அவர் தம் நூல்கள் மூலம் வாழ்கிறார்.

திரு. வி. க எழுதிய நூல்கள் பலவகையின. 1907-ம் ஆண்டு முதல் 1953 வரை இடையறாது எழுத்துத் தொண்டு செய்தவர் திரு.வி.க. சுமார் 55 நூல்கள் தமிழ் தாய்க்கு காணிக்கையாக கொடுத்த பெருமை திரு. வி. கவையே சாரும் இந்நூல்களில் உரைநடை நூல்களுண்டு; செய்யுள் நூல்களும் உண்டு. செய்யுள் நூல்கள் பெரும்பாலும் அவர் கண் பார்வை மறைந்தபின் எழுதப்பட்டவை.

1945-ல் அவர் கண் பார்வை மங்குமுன் எழுதிய உரைநடை நூல்களில் திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் சிறப்பு வாய்ந்தது.

உரைநடை நூல்களின் இடையே அவர் முதன் முதல் எழுதிய செய்யுள் உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல்”, தொடர்ந்து வந்தது, முருகன் அருள் வேட்டல்”, ‘திருமால் அருள் வேட்டல்’, பின்னர் 1942-ல் ‘பொதுமை வேட்டல் செய்யுள் வெளியாகியது.

1932 முதல் 13 ஆண்டுகள், அவர் எழுதிய உரை நடை நூல்கள் சமயம், அரசியல், நல்வாழ்க்கை, சீர்திருத்தம் வாழ்க்கை விமர்சனம்-மதிப்பீடு-சுய வாழ்க்கை வரலாறு ஆகிய பலவகைப் பட்டன.

இவ்வளவு நூல்களை எழுதிய பேரறிஞர் திரு.வி.கவை அவர்தம் நூல்கள் மூலம் காணுதல் எளிதா? இல்லையே! எளிதல்ல என்று தள்ளி (விடலாமா? கூடாது, கூடாது! பின் அவர் நூல்கள் மூலம் அவர் உள்ளத்தைக் காண்பது எங்ஙனம்? அவர் நடையை ஆராய ஏதாவது வழிமுறைகள் உண்டா? உண்டு.

A 440–1