பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்ப்பு எங்கிருந்து தோன்றியது? பிரபுக்களிடமிருந்து: பிஷப்புகளிடமிருந்து.

எட்வர்டு மன்னர் மனம் பற்றிய மங்கை யார்? வாலிஸ் சிம்சன் என்பவர். அவர் அமெரிக்க நாட்டினர். ஆயினும் அவரது முன்னோர் இங்கிலாந்து நாட்டினரே.

திருமதி வாலிஸ், ஐந்தடி நான்கு அங்குல உயரம் உடையவர்: நல்ல உடையில் விருப்பமுடையவர்: நகை மோகம் இல்லாதவர். நடன வல்லவர்; அமைதியும் இரக்கமும் இயல்பாகக் கொண்ட வர். இலக்கியத்தில் மனம் தோய்ந்தவர். மகிழ்ச்சியூட்டுவதில் வல்லவர். நல்ல அழகு டையவர்: எளிமையிலே விருப்பம் உடையவர்.

எட்டாம் எட்வர்டு, ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கும், மேரி ராணிக்கும் பிறந்த முதல் பிள்ளை. இருபத்தி ஐந்து ஆண்டு வேல்ஸ் இளவரசராக இருந்தவர்.

இளமையில் கற்பன கற்றவர்; கேட்பன கேட்டவர். நாடுகள் பல சுற்றியவர். எதையும் தாமே ஆராய்ந்து சீர்தூக்கி முடிவு காணும் ஆற்றல் மிக்கவர். சுறுசுறுப்புடை யவர். சோம்பல் இல்லாதவர். தொண்டில் நாட்டம் கொண் டவர். ஏழைகளுடன் நெருங்கிப் பழகியவர் தொழிலாளர் நல் வாழ்வில் கருத்துக் கொண்டவர். 1914-ம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பாப் போரில் பணியாற்றியவர்.

வாலிஸ் சிம்சன்-எட்வர்டு காதலுக்கு எதிர்ப்பு எழுப்பிய கூட்டம் அவ்வெதிர்ப்புக்கு கூறிய காரணம் யாது?

எட்வர்டு மன்னர் காதலித்த பெண்மணி, ஒருவரை மணந்தார்: மணவிலக்குச் செய்தார்; மீண்டும் மற்றொரு வரை மணந்தார். அவரையும் மணவிலக்குச் செய்து விட்டார்.

‘இவ்வாறு இருமுறை மணவிலக்குச் செய்த பெண் ஒருத்தியை மன்னர் மணம் புரிதல் கூடாது.’

I 76