பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அப்பெண்மணியை நாங்கள் எங்கள் அரசியாக ஏற்றுக் கொள்ள மாட்டோம்’ என்றது பிரபுக்கள் கூட்டம்.

‘மணச் சடங்கு புரிய இயலாது’ என்றார் பெரிய பிஷப்.

பெரிய பிஷப் யார்? அவர் தான் காண்டர்பரி ஆர்ச் பிஷப். அப்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் திரு பால்டுவின். பால்டுவின் எவர் வழி நின்று ஆடினார்? பிரபுக்கள் வழி நின்றார்.

எட்டாம் எட்வர்டு மன்னர் முன் தோன்றிய கேள்வி இதுவே. முடியா? காதலா? முடி வேண்டுமேல் காதலை துறக்க வேண்டும்; காதல் வேண்டுமேல் முடி துறத்தல் வேண்டும்.

எட்வர்டு மன்னர் தம் காதலில் உறுதியாக நின்றார். முடி துறந்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது உலகம் பலவாறு பேசியது. எட்வர்டுமன்னர் முடி துறந்தமைக்கு ஆதரவாகப் பேசியவர் சிலரே. பெரும்பாலோர், அச்செயல் குறித்து வருந்தினரே யன்றி பாராட்டினர் அல்லர்.

ஒரு பெண்ணின்பொருட்டுப் பெரியதொரு சாம்ராஐயத் தலைமைப் பதவி துறந்தது அறிவீனம் என்று பேசியவர் பலர்.

வாலிஸ் சிம்சனின் பக்கம் நின்றவரும் சிலரே. அவர் தம் செயலை ஆதரித்தவரும் சிலரே. வாலிஸ் சிம்சனின் பெருமையைப் பேசிப் பாராட்டியவரும் சிலரே.

இந்த நிகழ்ச்சி குறித்துத் திரு. வி. கவின் உள்ளம் எவ்வாறு எதிரொலிக்கிறது?

1 77