பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பெண்ணின் பெருமை” என்ற ஒப்பற்ற நூலைத் தமிழ் உலகுக்குத் தந்த திரு. வி. க. பெண்ணின் பெருமைக்கு இழுக்கு நேர்ந்தபோது வாளா கிடப்பரோ? கிடக்க மாட்டார் அன்றோ?

“எட்வர்டைத் தீமைகள் சூழ்ந்தன: முட்டின. அவர் அவைகளை எதிர்த்தாரில்லை. அவர் தியாகத்திற் கருத்துச் செலுத்தி முடி துறந்தார்.

‘எட்வர்ட் முடி துறந்த செய்தி பத்திரிகை வாயி லாகவும், பிற வாயிலாகவும், யாண்டும் பரவலாயிற்று. அச்செய்தியை முதல் முதல் யான் பத்திரிகையில் படித்த போது அஃது எனது உள்ளத்தைக் கவர்ந்தது.

“எட்வர்டின் துறவு நிகழ்ச்சி குறித்து என் உள்ளத்தில் பலவித எண்ணங்கள் எழுந்தன. அவைகளை எனது அருமை ‘நவசக்தி'யில் வரிவடிவில் வாரந்தோறும் வடித்து வந்தேன். ‘எண்ணங்கள் பல கட்டுரைகளாயின. அக்கட்டுரை களைக் கொண்டதே இந்நூல்.கட்டுரைகளை ஒழுங்குபடுத்தி நூன் முறையில் ஒருவாறு செப்பஞ் செய்யலானேன்.நூலின் உள்ளுறைக்கேற்ப முடியா? காதலா? சீர்திருத்தமா?” என்னுந்தலைப்புச் சூட்டப் பட்டது. இந்நூல் எட்வர்டின் துறவுவரலாற்றைப் பற்றி நிரலே கிளந்து கூறுவது அன்று. அத்துறவைப் பற்றிய ஓர் ஆராய்ச்சி நூல்.”*

‘காதல் என்பது தெய்வத் தன்மை வாய்ந்தது. அது காமமன்று. காதல் கடலினும் பெரிது. மலையினும் பெரிது உலகினும் பெரிது. அகிலத்திலும் பெரிது. அதற்கு ஈடு மில்லை; எடுப்புமில்லை; காதல் எல்லையற்றது. அதற்கு அகலமுமில்லை: நீளமுமில்லை. காதலின் மாண்பை அறிவார் யார்? காதலரே காதல் வெற்றியை உணர்வர். காதலுக்கு முன்னே, கல்வி என்ன? செல்வம் என்ன? சீர்

  • முடியா! காதலா? சீர்திருத்தமா?-திரு. வி. க.

(அணிந்துரை).

I 78