பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன? சிறப்பு என்ன? பதவி என்ன? பட்டம் என்ன? அரசு என்ன? சாம்ராஜ்யம் என்ன? எல்லாம் சிறுமை! சிறுமை! காதலுக்குக் காதலே பெருமை காதலரிடம் காதலே வீறு கொண்டு நிற்கும்.

“இருவரை மணந்து விலகிய ஒருத்தி காதற் கணி யாவளோ என்பதே புல்லிய உலகைக் கலக்கியிருக்கிறது. வின்ஸர் கோமகளார். மேல் நாட்டுப் பெண்மணி. அவ்வம் மையார் செயலை மேல்நாட்டு வழக்கவொழுக்கக் கண் கொண்டே பார்த்தல் வேண்டும்...

ஒருவர் நிலையை மற்றொருவர் உணராமலும் . ஒரு சமூகப் போக்கை வேறொரு சமூகம் உணராலும், ஒரு நாட்டார் வழக்க ஒழுக்கங்களை இன்னொரு நாட்டார் உணராமலும் ஒருவரை மற்றொருவரும், ஒரு சமூகத்தை மற்றொருசமூகமும் ஒரு நாட்டாரை மற்றொருநாட்டாரும் நிந்தித்துக் கூறுவது தவறு. அவரவர் நிலையை-அவ்வச் சமூகப் போக்கை-அவ்வந் நாட்டார் வழக்கவொழுக்கங் களை-நேரிலுணர்ந்தோ, நூல்கள் வாயிலாகத் தெரிந்தோ மற்றவர்பால் கேட்டோ-தெளிவடைந்த பின்னரே மக்கள் செயல்களைப் பற்றி முடிவு கூறுதல் அறம். ஒன்றையும் உணராது வாயில் வந்தவாறு உளறுவது அறமாகாது, ஆகவே, மேல் நாட்டுச் சமூக ஒழுக்கம், சட்டம் முதலிய வற்றைக் கொண்டே வின்ஸர் கோமகளாரது நிலையை அளந்து கூறுவது நியாயம். அவ்வழி விடுத்து ஒரு பெண்மணி மீது பழி பாவங்களைச் சுமத்துவது நியாயமாகாது.”*

எட்வர்ட் ஒரு பெரும் சாம்ராஜியத் தலைமை பூண்டவர். அத்தலைமைக்கு மேல் வேறொரு தலைமை அச்சாம்ராஜ் யத்தில் இல்லை. அப்பெரும் பதவியிலுள்ள ஒருவர் தமது மனத்துக்கிசைந்த ஒரு பெண்மணியை மணக்க விரும்பினர். அவ்விருப்பத்துக்கு மந்திரிசபை இசைந்து வரவில்லை. சாம்ராஜ்யத் தலைவருக்குச் சோதனை ஏற்பட்டது. என்ன * முடியா? காதலா? சீர்திருத்தமா?’, தோற்றுவாய்,

பக், 11

1 79