பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதனை? சாம்ராஜ்யம் பெரிதா? காதல் பெரிதா? என்னுஞ் சோதனை.

எட்வர்டுக்குச் சாம்ராஜ்யம் பெரிதாகத் தோன்றிற்றா? காதலே பெரிதாகத் தோன்றிற்று.

அவர் என்ன நினைத்திருப்பார்?

‘நாம் ஒரு பெரிய சாம்ராஜ்யத் தலைவர்; நமக்கு மேல் ஒரு தலைவர் சாம்ராஜ்யத்தில் இல்லை.இத்தகைய தலைமை தாங்கியுள்ள நமக்கு, நாம் விரும்பிய பெண்னை மணம் செய்யும் உரிமையில்லையே..என்னே சாம்ராஜ்யத் தலைமை!’ என்று நினைத்திருப்பர். இந்தினைவெழும் நெஞ்சினர்க்குச் சாம்ராஜ்யத் தலைமை எங்ஙனந் தோன்றும்? அஃது இன்ப மாகத் தோன்றுமா? அது சுவையாகத் தோன்றும். தளையாகத் தோன்றும். சிறையாகத் தோன்றும். உரிமை யற்ற இடம் எத்தகையாயினும் அது சிறையேயாகும்...ஒரு பெரும் சாம்ராஜ்யத் தலைவருக்குத் தாம் விரும்பிய நங்கையை மணம் செய்து கொள்ள உரிமையில்லை.

இவ்வுரிமை காட்டில் விலங்கோடு வாழும் குறவனுக்கு உண்டு. ஒரு பெரும் மன்னர் மன்னருக்கு இவ்வுரிமை இல்லை. என்ன உலகம்! இங்கிலாந்து உரிமை நாடாம்!

எட்வர்ட் எத்தகையவர்? அவர் உரிமையில் பிறந்து உரிமையில் வளர்ந்து உரிமை வண்ணமாயிருப்பவர். அத்த கைய ஒருவர் சாம்ராஜ்யப் பதவியின் பொருட்டு உரிமை யைப் பறி கொடுப்பாரோ? ஒரு போதுங் கொடார்...

உரிமையுணர்வுடையார் எதையுந் தியாகஞ் செய்யமுற் படுவர். அவ்வுணர்வில்லாதார் தியாகத்துக்கு அஞ்சுவர். எட்வர்ட் காதலின் பொருட்டுப் பெருந்தியாஞ் செய்தார். அவர் தியாகத்தின் பொருளானார். தியாகத்தின் இலக்கிய மானார். தியாகமேயானார் என்றுங் கூறலாம். உலக சரித் திரத்தில் எட்வர்டின் தியாகத்தைப் போன்றதொரு தியாக மில்லை.

1 & 0