பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சன்மார்க்கப் பொதுவுடைமையில் சிந்தை தோய்ந்த திரு.வி.க-தொழிலாளர் நலனில் கருத்துக் கொண்ட திரு வி.க-புரட்சியுள்ளம் படைத்த திரு.வி.க-பிரபுக்களின் சூழ்ச்சி பற்றி வெளியிட்ட கருத்துக்களைக் கீழே காணலாம்.

எட்வர்ட் துறவுக்கு மூலகாரணம் பிரபுக்களின் சூழ்ச்சி என்பது முன்னே சொல்லப்பட்டது. பிரபுக்கள் வழியே மந்திரிசபை ஆடிற்று. முதல் மந்திரியும் ஆடினார். மற்றவரும் ஆடினர். இந்நாளில் உலகை ஆட்டி வைப்போர் பிரபுக்களே யாவர்.

‘பிரபுக்கள் பண்டை நாளில் தெய்வ பக்தியுடையவர் களாக இருந்தார்கள். தங்கட்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்தார்கள். அவர்கள் தங்கள் நிலபுலங்களையும் பொன் பொருளையும், பிறவற்றையும், தங்கள் உரிமைச் செல்வங் களாகக் கொண்டார்களில்லை. அவைகள் இறைவனுடைய வென்றும், அவைகளின் பயனை மக்கள் அறவழியில் பகிர்ந்துண்பதற்குத் துணை புரியும் தர்மகர்த்தர்கள் தாங்கள் என்றும் எண்ணியே காலங்கழித்தார்கள்.அந்நாளில் பிரபுக்கள் ஜீவகாருண்யமுடையவர்களாக வாழ்ந்தார்கள் என்று சுருங்கச் சொல்லலாம்.

‘பின்னே இயந்திர ஆட்சி தோன்றியது. அவ்வாட்சி, பிரபுக்களை ஆசைச் சேற்றில் அழுத்தியது. தன்னலப் பேய், அவர்களை விழுங்கியது. பிரபுக்கள் தங்கள் நலன் கருதியே வாழலானார்கள். தங்கள் நலத்துக்கு ஏழை மக்கள் படைக்கப் பட்டார்கள் என்று எண்ணலானார்கள். ஏழை மக்களை அடக்கியாள வேண்டி அவர்கள் அரசுகளைத் தங்கள் வயப்படுத்தினார்கள். பத்திரிகைகளைத் தங்கள் வயப்படுத்தினார்கள்.

“புரோகிதர்களையும் தங்கள் வயப்படுத்தினார்கள். சட்டங்கள் பல அவர்கள் நலத்துக்கென்றே செய்யப்பட்டன. கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட ஒவ்வொரு நாடும் ஆங்காங்குள்ள ஒரு சில பிரபுக்களின் வயப்படலாயிற்று.

I 82