பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரி ஆர்ச் பிஷப் உலகம் எது? அன்பர்களே! சிந்தியுங்கள். பிரபுக்கள் பிஷப்பைத் தூண்டிய போது, அப்பாலே போங்கள்’ என்று கூற அவருக்கு மனம் எழுந்ததா? சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமைகளையும் கொடுக்க வந்த சாத்தானைப் பார்த்து இயேசு பெருமான் என்ன சொன்னார்? அப்பாலே போ சாத்தானே’ என்றன்றோ சொன்னார்? அக்கிறிஸ்துவின் அடியவர் சாத்தானுக்கு ஏவல் செய்ய ஒருப்படுவரோ?

காண்டர்பரி ஆர்ச் பிஷப்புக்கும் மற்றவருக்கும் சீற்றம் எழுப்பியது எது? எட்வர்ட் ஓர் ஏழை மகளை'த் திருமணம் செய்ய விரும்பியதேயாகும். அப்பெண்மணி இருவரை மணந்து விலகிய பாவியாம். அந்தோ! கிறிஸ்து யாருக்காக உலகில் வந்தார்? ஆர்ச் பிஷப் பதிலிறுப்பாராக, பைபிள் என்ன சொல்கிறது? சத்திய சுவிசேஷம் என்ன சொல்கிறது?

“...தரித்திரருக்குச் சுவிசேஷம், பிரசங்கிக்கப்படுகிறது.’ மத்தேயு: 11: 5

“நீதிமான்களையல்ல பாவிகளையே மனத்திரும்ப வேண்டுமென்று அழைக்க வந்தேன் என்றார்.’

லூக்கா: 5: 38

பரிசேயரில் ஒருவன் தன்னோடு போஜனம் பண்ண வேண்டுமென்று அவரை (கிறிஸ்துவைக்) கேட்டுக் கொண்டான். அவர் அந்தப் பரிசேயன் வீட்டுக்குப் போய்ப் பந்தியிருந்தார். இதோ அந்த ஊரில் பாவியெனப் பேர் வாங்கின. ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதையறிந்து ஒரு வெள்ளைக்கல் ஜாடியில் பரிமளத் தைலம் கொண்டு வந்து அவர் பாதத்தருகே பின்னாக நின்று அழுது அவருடைய பாதங்களைத் தன் கண்ணிரினால் நனைக்கத் தொடங்கித் தன் தலைமயிரினால் துடைத்து அவர் பாதங்களைத் திரும்பத் திரும்ப முத்தம் செய்து பரிமள தைலத்தைப் பூசினாள். அவரையழைத்த

185