பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க தம் நடையைப் பற்றி என்ன சொல்கிறார் பார்ப்போமா?

“மொழி நடையைப் பற்றிய போராட்டத்தையும் என் வாழ்க்கை கண்டது. இப்போராட்டம் பொருளற்றது என்பது எனது உள்ளக் கிடக்கை. ஒரே மனிதர் வாழ்க்கை யிலே பல திற நடைகள் அமைகின்றன. எழுதிப் பழகப் பழக அவர்க்கு என்று ஒரு நடை இயற்கையாகும். இன்னொரு வர்க்கு வேறுவித நடை இயற்கையாகும். இவர் அவரைக் குறை கூறுவதும் தவறு. ஒரே வித நடை எல்லாரிடத்திலும் அமைவது அரிது உலசம் பலவிதம். ஒரே வித விதைகள் ஒரே வித நிலத்தில் விதைக்கப்படுகின்றன. அவை முளைத்து மரங்களாகுங்கால் எல்லாம் ஒரேவித வடிவங்களையா பெறுகின்றன? இல்லையே! மரங்கள் எத்தனையோ வடிவங்கள் பெறுகின்றன. இஃது இயற்கை அன்னையின் திருவிளையாடல். மொழி நடையும் அவரவர் இயற்கைக் கேற்ற வண்ணம் அமையும். இயற்கை அமைவைக் குறித்து போராட்டம் எற்றுக்கு? என்னுடைய வாழ்க்கையில் மூவித நடைகள் மருவின. ஒன்று இளமையில் உள்ளது: இன்னொன்று சங்க இலக்கியச் சார்பு பெற்றபோது பொருந்தியது: மற்றொன்று பத்திரிகையுலகை உடைந்த நாளில் அமைந்தது. இறுதியே எனக்கு உரியதாய்-உடைய தாய் நிலைத்தது. இந்நடை எளியது; சிறுசிறு வாக்கியங் களாக ஆவது. இந்நடையிலும் நூலுக்கேற்ற, காலத்துக் கேற்ற அமைவு தானே பெறும்.*

திரு.வி.கவின் பேச்சிலே அவர் உள்ளத் தெளிவு தெறிக்கும்; எழுத்திலே அத்தெளிவு பளிச்சிடும். துய்மையும் உள்ளத் தெளிவும் ஒருங்கே பெற்ற ஒருவரின் பேச்சும் எழுத்தும் ஒரே மாதிரியாக அமைந்ததில் வியப்பென்ன, நவசக்தியின் தலையங்கங்கள் இத்தெளிவுக்கும் தூய்மைக்கும் அத்தாட்சி.வாசகர்களிடம் நேரிடையாக பேசும் அவ்வெழுத்

  • திரு.வி. வாழ்க்கைக் குறிப்பு.

6