பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசேயன் அதைக் கண்டு இவர் தீர்க்கதரிசி யென்றால் தம்மைத் தொட்ட ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப் பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். இயேசு அவனிடம்: சீமானே உனக்கு நான் ஒரு காரியம் சொல்ல வேண்டும், அவன், சொல்லும் போதகரே என்றான். அப்பொழுது அவர்; ஒருவனிடம் இரண்டு பேர் கடன் பட்டிருந்தார்கள்; ஒருவன் ஜந்நூறு திநாரியமும் மற்றவன் ஐம்பது திநாரியமும் கொடுக்க வேண்டியதாயிருந்தது. கடனைத் தீர்க்க அவர்களுக்கு நிர்வாசமில்லாதபோது இருவருக்கும் மன்னித்து விட்டான். இவர்களில் எவன் அவனிடம் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என, சீமான், எவனுக்கு அதிகம் மன்னித்துவிட்டானோ அவனே என்று நினைக்கிறேன் என்றான்.

‘அவர் அவனிடம் : சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி அந்த ஸ்திரீயின் பக்கமாகத் திரும்பிச் சீமானை நோக்கி, இந்த ஸ்திரீயைப் பார்; உன் வீட்டிற்குள் வந்தேன். நீ என் கால்களுக்குத் தண்ணிர் தந்ததில்லை. இவளோ, தன் கண்ணிரினால் என் கால்களை நனைத்துத் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள். நீ என்னை முத்தஞ் செய்ததில்லை. இவளோ நான் உள்ளே வந்ததுமுதல் என் பாதங்களை ஓயாமல் முத்தஞ் செய்தாள். நீ என் தலையில் எண்ணெய் பூசியதில்லை. இவளோ என் பாதங்களில் பரிமள தைலம் பூசினாள். ஆதலால் நான் உனக்குச் சொல்கிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டன...... ’’ எனறார். லூக்கா 7:36:50

கிறிஸ்து தரித்திரர்க்கென்றே வந்தார். பாவிகளுக் கென்றே தோன்றினார். அவரடிச்சுவட்டைப் பற்றி நடப் போரும் தரித்திரர்க்கென்றும், பாவிகளுக்கென்றும் வாழ்தல் வேண்டும்; உழைத்தல் வேண்டும். கிறிஸ்து கிறிஸ்து என்று உதட்டளவில் சொல்வதாலும், அவர்தஞ் சுவிசேஷத்தைப் படிப்பதாலும், அதைப் பிரசாரஞ் செய்வ

186