பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

சமூக சீர்திருத்தவாதி திரு. வி. க

பெண்ணே போற்றி

பெண்ணின் பெருமை நூலின் முதல் பதிப்பு 1927 ஆம் ஆண்டில் வெளி வந்தது. தொடர்ந்து பல பதிப்புக்கள் வந்துள்ளன.

அந்நூலிலே பின்வருமாறு குறிப்பிடுகிறார் திரு.வி. க.

‘யான் பெண் வயிற்றில் தோன்றினேன்;பெண்ணுடன் பிறந்தேன்; பெண்ணுடன் வாழ்ந்தேன். என் வாழ்விற்கு நாடோறுந் துணை புரியும் இயற்கை, பெண்ணாகவே காட்சியளிக்கிறாள். யான் தொழும் அன்புத் தெய்வமும் பெண்ணாகவே இருக்கிறது. எனது உள்ளத்துள்ள பெண்மை அருளைச் சொரிகிறது. யான் பேசும்மொழி எனக்குப் பெண்ணின்பம் நல்குகிறது. எல்லாம் பெண்மயமாக என்னைச் சூழ்ந்து என்னுடலுக்கும் உயிருக்கும் நலஞ் செய்கின்றன. இத்தகைய பெண் தெய்வத்தை முதன்மை யாகப் போற்றுகிறேன். பெண்ணே, முதன்மையுடையாள், அத்தாயை வணங்குகிறேன்.”*

சூரிய மண்டலத்திலே எங்கே சூடு அதிகம்? வெளிப் பாகத்திலா, உள் பகுதியிலா?

  • பெண்ணின் பெருமை-திரு. வி. க, பக். 24-25,

I 88