பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரியனைத் தொட்டுப் பார்க்க இயலுமா? இயலாதே! பின்னே இந்த வினாவுக்கு விடைத் தான் காண்பது எப்படி? நிறத்தை உற்றுப் பார்க்கின் உண்மை ஓரளவு புலனாகும். செந்நிறம் கொண்டு செந்தழலாக விளங்கும் பகுதி வெப்பம் மிகுந்த பகுதி, அந்த திறம் உள்ள இடமே சூடு அதிகம்.

அதனடியில் இருக்கும் நீல நிறப் பகுதியோ, வெப்பம் அடங்கிய பகுதி. இந்த வெப்பமும் தட்பமும் கொண்டதே இவ்வுலகம். வெப்பம், தட்பம் இரண்டுமே விரவியிருந்தால் தான் இயற்கை செவ்வனே இயங்கும். ஏதேனும் ஒரு கூறு அதிகரித்தாலோ, இயற்கை மற்றொன்றை மிகைப்படுத்தித் தானே சமன் செய்யும்.

நம் கோயிகளில் உள்ள மூர்த்திகள் இந்த அரிய தத்துவத்தை எடுத்துக் காட்டுவனவே. வெப்பம் ஆணினத் தைக் குறிக்கும். வெப்பத்தைக் குறைக்கும் தட்பமோ, பெண்ணினம்; ஆண்-சிவன்; பெண்ணோ-சக்தி; எனவே சிவனின்றி சக்தியில்லை; சக்தியும் சிவனன்றி இல்லை. பெண் இன்றேல் ஆணினம் எங்கே? தாய்மை எங்கே? நாடு எங்கே? மக்கள் எங்கே? மற்றவை எங்கே, எங்கே?

பெண் யார்?

பெண் என்றால் பெண்ணாகப் பிறந்தவர் எல்லோரும் பெண்ணாவரோ? ஆகார்! பெண் உறுப்போடு இருந்து விட்டால் மட்டும் பெண் ஆகிவிட முடியாது. அத்துடன் கூட அவர்களுக்கு வேறு பல இயல்புகளும் தேவை. பெண் உறுப்போடு வேறு பல இயல்புகளையும் கொண்ட ஒன்றே பெண்ணென்பது. அவ்வியல்புகளின் திரட்சி பெண்மை எனப்படும். இப்பெண்மையுடையது பெண்ணென்க.”

பெண்மை

‘பெண்மையாவது யாது? அடக்கம், பொறுமை, தியாகம், பரநலம், இரக்கம், அழகு, ஒப்புரவு, தொண்டு முதலியன அமைந்த ஒன்று பெண்மை எனப்படும். பெண்மை

189