பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதை கூறிட்டு பார்ப்பின், அஃது அடக்கம் முதலிய நீர்மைகளாகப் பிரிந்து நிற்கும்; ஆகவே, அடக்கம் முதலிய இயல்புகளின் திரட்சி பெண்மையாகிறதென்க.”

பெண் பிறவியின் நோக்கம் தாய்மைத் தொண்டு. இவ்வுலக ஆக்கமும் அழிவும் அவளிடந்தான் இருக்கின்றன.

‘ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே!” இது எவ்வளவு உண்மை!

பெண் தன் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளைத் தீய வழியில் வளர்த்து உலகில் விட்டால், உலக நிலை என்னாகும்?

பெண்ணின் தாய்மைத் தொண்டு எத்தகைத்து? உலக நலத்துக்கே உரியதன்றன்றோ? இதைவிட உலகில் வேறு பெருமையுண்டோ?

தாய்மைத் தொண்டு

தாய்மைத் தொண்டு என்பது எளியதன்று. இது பற்றி பேசுவது எளிது; எழுதுவதும் எளிதே! ஆனால் தாய்மைத் தொண்டு எளிதோ? இல்லை, இல்லை, இல்லவே இல்லை. இத்தொண்டு தெய்வீகப் பணி; பயன் கருதாத தியாகப் பணி.*

பெண் என்பதற்கு மற்றொரு பெயரும் உண்டு, அதுவே தியாகம். எனவேதான் பெண்பாற் பெயர்களையே நமது ஆறுகள் பெற்றிருக்கின்றன. காவேரி, கோதாவரி, யமுனை, கங்கை என்று அவை தம் பயன் கருதா இயல்பால் அழைக் கப்படுகின்றன. இயற்கையை வெறுக்கும்போது அவை சீறி எழுகின்றன; வெள்ளமாக கரையை உடைக்கின்றன.

  • பெண்ணின் பெருமை”, பக். 12. * விரிவுக்கு-திரு.வி.கவின் “என் கடன் பணி செய்து

கிடப்பதே’ ஒத்து பார்க்க.

! 90