பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதம்; அதையும் உதாசீனம் செய்தால், அழித்து, மீண்டும் ஆக்க செயலில் ஈடுபடுகின்றன. உலகில் நாடுகளையும், பெண்களாகவே நினைப்பதற்கும் காரணமிதுவே

பெண்ணே போற்றி!

பெண்ணின் முதன்மை மறந்தாலோ, ஆங்கே நிகழ்வ தென்ன? கல்வி அருகும்; திரு மறையும்; பொழிவு பறந்தோடும்; அன்பு அழியும்; உரிமை குறுகும்; வாய்மை பறக்கும். தொண்டு திகைப்புறும்; தெய்வ மணமோ கருகும்; இது வரலாறு தந்த பாட்டு.

பெண்ணை தேவி’ என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் ஆண் வர்க்கத்தை தேவன்’ என்று குறிப்பிடுபவர் எத்தனை (3ri ! !

வரலாறு என்ன கூறுகிறது? இடைக்காலத்தில் நம் நாட்டில் ஏற்பட்ட மானக் கேட்டைக் கூறுகிறது; நாடு

நலங்குன்றச் செய்த சில சுயநல வர்க்கத்தின் இழிச் செயலைக் கூறுகிறது.

இந்த நாடு எத்தகைத்து? பண்டையிலே பெண் னினத்தைப் பேணி, போற்றி பெருமைக் கொண்ட நாடு அத்வைத பேரொளி சங்கரன் சர்ச்சைக்கு உபயபாரதி என்ற ஆரணங்கை நடுநிலை வகுக்கச் செய்த நாடு;

கணித மேதையும் கர்த்தாவும் ஆகிய லீலாவதியை போற்றிய நாடு;

சுலபா என்ற பெண் புலவரின் புலமையைக் கொண்டாடிய நாடு;

கற்புச் செல்வி சிதைக்காக காவியமே படைத்த நாடு;

சபரியின் தியாகத்தை வாயார, மனதார போற்றிய பழம் பெரு நாடு!

I 91