பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனக்குரிய துணைவனைக் காதலித்துத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெண்களிடம் இருந்து பறித்தது ஏன்?

தம் மனப்படி பெண்டிரைத் திருமணம் செய்வதற்கே, கடிமணத்தைத் தடுத்த சூழ்ச்சிக் கும்பல், அஞ்சாது கிழவர்க்கு இளம் பெண்களைத் திருமணம் என்ற பெயரில் பலியிட்டது.

ஒரு பெண்ணுக்குப் பிள்ளை பிறக்காவிட்டால், அவளை “மலடி” என்று இழித்துப் பேசியது. அவளுக்குத் தாய்மைக்கு அருகதை இல்லையா? இல்லை, இந்தக் குறை அவள் கைப் பிடித்த ஆண்மகனிடம் இருக்காதா? அவன் மலடாக இருக்க மாட்டானோ?

இதை நினைக்கவே மறுத்தது சமுதாயம். ‘பிள்ளை இல்லை என்ற குறையைப் பெரிதுப் படுத்தியது; முதலில் மனைவியின் தலையில் பழியைப் போட்டது. வேறொரு பெண்ணை அவள் துணைவனுக்கு மணஞ் செய்வித்தது. என்ன அநியாயம்!

பெண்களுக்கே கற்பு’. மற்றவர்க்கில்லை. கற்பைப் பேண வேண்டியதும் பெண்; கற்பைக் காக்க வேண்டியதும் பெண் மட்டுமே என்று ஒருபட்ச நீதியை வலியுறுத்தியது.

ஆண்கள் விலங்குகளாகத் திரியலாம். அதைக் கேட்பார் இல்லை; தடுப்பார் இல்லை.

ஆனால் பெண்ணோ: ஆணின் வெறிக்கு இலக்கானவள்; வேசி பட்டம் பெற்றாள்.

இந்த அநீதிகளைச் சொல்லும் போது, திரு. வி. க இரத்தக் கண்ணிர் வடிக்கிறார்; ஒழுக்கம் இருபாலார்க்கும் உரியதன்றோ !

பெண்ணினத்தைப் பேய்!” என்றும் மாயை’ என்றும் மாசுபடுத்திய சமூகத்தை வெறுக்கிறார் தமிழ்ப் பெரியார்.

193