பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'குழந்தைகளின் மன மொழி மெய்களில் எக்காரணம் பற்றியும் தீமை படியாதவாறு தாய் தந்தையர் அவர்களைக் காத்து வர வேண்டும்.

‘மற்றவர் கூட்டுறவாலும் அவைகட்கு கேடு நிகழாத வாறு காத்து வருதல் சிறப்பு’ என்கிறார் இராயப் பேட்டை முனிவர் பிறிதோரிடத்தில்.

மற்றொரு முக்கியமான எச்சரிக்கையும் விடுக்கிறார் திரு.வி.க. -

அன்பு-அடக்கமானது

அன்பு உள்ளடங்கி அடக்கமாக இருக்க வேண்டும். வெளிப்படையாகக் காட்டக் கூடியது அன்று உண்மையான அன்பு, பிள்ளைகளுக்கு அறிவை வளர்க்க வேண்டும் என்பதற்காக, பள்ளிக்கு தாயும் தினமும் செல்ல வேண்டுவ தில்லை. பிள்ளைக்குத் தரும் பாடங்களை தாய்தான் செய்ய வேண்டும் என்று நினைப்பதும் தவறு. இது குழந்தையின் தன்னம்பிக்கைக்கு ஊறு தேடும்.

தற்காலத்தில அன்பு என்ற சொல்லுக்கு தாய்மார் எப்படி விளக்கம் கூறி, விளக்கத்தை செயலில் காட்டு கின்றனர் என்று அறிஞர்கள் சிந்தித்துப் பார்ப்பாராக,

அது மட்டுமா? தாய் தன் அறிவை வளர்க்கவோ, பொழுது போக் காகவோ பாலுணர்ச்சியைக் கிளறும் இலக்கியங்களைப் பிள்ளைகள் எதிரில் படிப்பது தவறு: அதைவிட மாபெருந் தவறு அதை ஒளிப்பது. அதேபோல் சினிமா என்று எதையும் பறந்து பறந்து பார்ப்பதும், நல்லதல்ல.

இன்றைய வயது வந்தோர்க்கு மட்டும் என்ற படங் களில் முண்டியடிக்கும் கூட்டத்தில் அதிகமாக உள்ளவர் யார்? சற்றே உன்னிப்பாகக் கவனியுங்கள்!

T பெண்ணின் பெருமை, பக். 62.

195