பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. வின் தீர்க்க தரிசனம் இன்றைய சமுதாயப் போக்கைப் பார்க்கும் போது தெரிகிறதல்லவா? பெண்ணும் இயற்கையும்

பெண்ணை எப்படி பேணி வளர்த்தல் வேண்டும் என்ற முறையினை திரு.வி.க விளக்கிக் கூறுகிறார். இயற்கை யோடு கூடிய வாழ்வை பெண் ஏற்று, நடக்கக் கூடிய அளவு பழக்க வேண்டும். இளமையிலேயே இச்சிறந்த இயல்பை ஏற்படுத்தி விட்டால், பின் செயற்கைக்கு அடிமைப் பட எந்தப் பெண்ணும் விழைய மாட்டாள். உணவு பற்றிக் கூறும் திரு.வி.க பெண்மக்கள் உடை பற்றியும் கூறுகிறார்.

“நாகரிகம் முதிர முதிர மக்கட்கு உடை ஏற்பட்டது. உடையை, உடல் நலத்துக்கென அணிதல் வேண்டுமேயன்றி, ஆடம்பரத்துக்கென அணிதல் கூடாது. உலகில் பெரும் பான்மையோர் ஆடம்பரத்துக்கென்றே உடை உடுத்துகின் றனர். இதில் பெண்மக்கள் பேர் பெற்றவர்கள். ஆடம்பர உடை ஒருவரை உயர்த்துவதுமில்லை; அல்லாத உடை ஒருவரைத் தாழ்த்துவமில்லை. உயர்வு தாழ்வு உடையில் இல்லை.*

‘'நல்லறிவுடைய பெண்மகள், விலை உயர்ந்த உடை களை வாங்கித் தருமாறு எவரையும் வலியுறுத்தாள். தூய எளிய நல்லுடையையே அவள் விரும்புவாள். *

‘ஆடம்பர உடைமீது கருத்தைப் பதிய வைத்துள்ள பெண்ணின் வாழ்வு, பின்னை நலமுறுதல் அரிது. நமது நாட்டில் எத்துணைப் பெண்மக்கள் வாயைக் கட்டி, வயிற் றைக் கட்டி, நாயகனையும் வஞ்சித்து, விலை உயர்ந்த புடவைகளை வாங்கிப் பெட்டியில் வைத்து, அழகு பார்த்து மகிழ்கிறார்கள். உடை எற்றுக்கு என்று இளமையில் உணராத குற்றமே இவ்வறியாமைக்குக் காரணம்.’’**

  • பெண்ணின் பெருமை , பக். 94.


  பக், 95.

196