பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்

மதிப்பீடு நூல்

திரு. வி. க காந்தியடிகள் பால் பெரு மதிப்பு வைத்திருந் தார். காந்தியடிகளின் போதனை அவரைக் காந்தமென ஈர்த்தது. காந்தியடிகளைக் கண்டார்; மரியாதை அதிகரித்தது. அவர்தம் பிரசங்கத்தை மொழி பெயர்த்த போது, அவரது ஆழ்ந்த அறிவு திரு. வி. கவை வியக்கச் செய்தது. அவருடன் உழைப்பதைப் பெரும் பேறாகக் கருதினார். காந்தியடிகள் நூல்கள் வெளியானவுடன், அவைகளை மிக்க கவனத்துடன் படிப்பார்: இந்தியாவில் வெளிவரும் காந்தியடிகளின் கொள்கை களையும் விமர்சனங்களையும் ஊன்றிப் படிப்பார்: அடிகள் பால் கொண்ட அன்பு பன்மடங்கு ஆகும். “யங் இந்தியா’ இதழ்களை மொழி பெயர்த்து வெளியிடுவதில் பேருவகைக் கொண்டார் திரு. வி. க.

காந்தியடிகளின் வாழ்க்கை முறை திரு. வி. கவை மிக மிகக் கவர்ந்தது. எப்படி? இக்காலம் எத்தகைத்து? பொய், புரட்டு, பொறாமை மலிந்தது. மகாத்மா கையாண்ட முறைகள், ஆயுதங்கள் யாவை?

மெய்யே எல்லாவற்றிற்கும் அஸ்திவாரம்; ஆயுதமோ அன்பு என்னும் வில்; இவ்விரண்டினையும் உபயோகித்து

200