பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய்மையை வீழ்த்தி, வாய்மையை நிலைநாட்டிய பெருந்தகை காந்தியைப் பார்த்துப் பார்த்து பெருமிதம் கொண்டார். அன்புவழி சன்மார்க்க சமரசம் பரப்பிய அண்ணலைப் போற்றினார்; புகழ்ந்தார் தமிழ்க்கடல்,

பின்னணி

தேச பக்தனில் ஓராண்டு காலம் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’ என்ற தொடர் கட்டுரை வெளிவந்தது. பின்னர் இதுவே மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும்’ என்ற சிறு நூலாக வெளிவந்தது.இது 1921 ஆம் ஆண்டில்.

இதன் விரிவு பின்னர் வெளியிடப்பட்டது.

வெளியீட்டின் போது சூழ்நிலை

இதை வெளியிட்டபோது தமிழ்த் தென்றலுக்கு ஏற்பட்ட துன்பங்கள் ஒன்றா, இரண்டா? பல, பலப் பல.இத் துன்பக் கடலிலிருந்து கரைசேர தோணியாக உதவியது காந்தியடிகளின் கொள்கைகள். சோர்வுற்ற மனத்திற்கு மருந்தாகி, நிவாரணமுமாகியது.

‘பிரசாரம் செய்வது எளிது. அதன்படி வாழ்ந்து காட்டுவது சிலரே. இது உலக உண்மைகளுள் ஒன்று. அண்ணல் காந்தி இந்த உண்மைக்கு விதிவிலக்கு. இதை அறிவுறுத்தவே உருவாகியது ‘மனித வாழ்க்கையும் காந்தியடி களும்’ என்ற நூல்.

மூன்று கேள்விகள்

மனிதன் எவன்? மனித பிறப்பு எத்தகைத்து?

மனிதனாக வாழ்வதெப்படி?

இந்த மூன்று வினாக்களை எழுப்பி ஒவ்வொன்றிற்கும் விளக்கம் தருகிறார். இந்த விளக்கங்களுடன் அடிகளின்

2 so I