வாழ்க்கையை ஒப்பிட்டு சீர்தூக்கிப் பார்க்கிறார் இராயப் பேட்டை முனிவர்.
மனிதன் எவன்? மனித பிறப்பு எய்தியவர் எல்லோரும் மனிதராவரோ? ஆகார்.
பின்? இதை எவ்வாறு கண்டறிவது?
'மனித பிறப்பு விருப்பமுடையது’ என்பது ஒருமுகமான விடை. இந்தப் பிறவி எவ்வாறு சிறந்தது? மற்ற உயிர்களைக் காட்டிலும் ஆராயக்கூடிய ஆற்றலுடைய ஆறாவது அறிவு பெற்றிருப்பதே இச்சிறப்பின் காரணம். இந்த ஆறாவது அறிவே பகுத்தறிவு. பகுத்தறிவைப் பயன்படுத்தும் பண்பாளனே மனிதன்.
மனிதனாக வாழ்வது எப்படி? அந்த வாழ்க்கைக்குச் சீர்தூக்கும் கோல் உளதோ? உள்ளது.
அதனுடைய எடை கற்கள் புறத்துாய்மை,அகத்துய்மை: இவ்விரு தூய்மைகளின் வழிமுறைகள், சத்தியாக்கிரகம் என்பன.
அண்ணல் காந்தியடிகளை இந்த நோக்கில் நோக்குகிறார்; அவர் தம் வாழ்க்கை முறையை ஆராய்ச்சி செய்கிறார் திரு.வி.க இந்நூலில்.
தமிழ் முனிவர் என்ன கருத்து சொல்கிறார்?
வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து காட்டியவர் காந்தி.
அகத்துாய்மை பிற உயிரை தன்னுயிரைப் போல பேணச்செய்யும்; பிறர்க்கெனவே வாழ்ந்து இன்பம் பெறத் துரண்டும். கொலை, களவு, காமம், குரோதம், பொய் ஆகிய ஐம்பெருங் குற்றங்களைக் கண்டு அஞ்சும்; ஒதுக்கும்; விரட்டும். பிற உயிர்களைத் துன்புறுத்த மனத்தாலும் கூட ஒருக்காலும் எண்ணாதவாறு காவல் புரியும்.
202