பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தி கடல் கடந்து பயணம் செய்து திரும்பினார் உலகம் புகழ்ந்தது. ஆனால் தனயன் பிராயச்சித்தம் செய்துக் கொண்டால் வீட்டில் நடக்கும் விசேடங்களில் கலக்கலாம் என்று வற்புறுத்தினார். காந்தியடிகள் என்ன செய்தார்? அதற்கு உடன் பட்டார். ஏன்? கோழைத்தனத் தாலா? இல்லை, இல்லை!

அவருடைய விட்டுக்கொடுக்கும் தன்மை கொள்கையை வென்றது. அதனால் என்கிறார் தமிழ்க் கடல், மூத்தோருக்கு வளைந்து, மரியாதையும் மதிப்பு கொடுப்பதன்றோ நற்பண்பு!

தாய் சொல் மந்திரம்

தாய் சொல்லின்படி நடப்பவர் எத்தனை பேர்? வெகு சிலரே. இந்த ஒரு சிலரைக் காட்டிலும் மிஞ்சிவிட்டார் அண்ணல் தம் தாயிடம் கொண்ட பக்தியில்,

இங்கிலாந்து செல்ல அனுமதி கேட்டார் தாயிடம்; தாயும் அனுமதித்தார். ஒரே ஒரு வாக்குறுதியை மீறுவ தில்லை என்று சத்தியம் செய்துக் கொடுத்தால், அவர் சீமைக்குச் செல்லலாம் என்றார் அன்னை.

“குடி, பெண், புலால் மூன்றையும் என்றுமே தொட மாட்டேன்!’ என்று வாக்கு தந்தார் அண்ணல். பயணம் மேற்கொண்டார். வாய்மையைக் காக்க அவருக்குக் கவச மாகத் தந்தார் அவர் அன்னை ஒரு துளசி மாலையை, தாய் இறந்த பின்னரும் இந்த மாலையே அவரைக் காத்தது: தன்னம்பிக்கை கொடுத்தது; திடசித்தத்தை நல்கியது. இந்தத் துளசி மாலையைக் களைந்துவிட வேண்டுமென போதித்தவர் எத்தனை பேர்? துளசி மாலை, கழுத்தை விட்டிறங்கியதா? இறங்கவே இல்லை. வாய்மையைக் காத்த இந்த அடிகள், அரிச்சந்திரன் என்ற உண்மை விளம்பியை மிஞ்சி விடுவாரன்றோ?

204