பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியாக்கிரகம்-பல்வகை முறைகள்

இடத்திற்கு இடம்: காலத்திற்குக் காலம்; இதன் முறைகள் மாறுபடும். அவை ஆங்காங்கே எழு துராக்கிரக நிலையைப் பொறுத்து நிற்கும். சில இடங்களில் சிறிது வருந்தலாகவும், சில இடத்தில் உயிர் துறத்தலாகவும், சில விடத்தில் உதவி மறுத்தலாகவும், சிலவிடத்தில் சட்டமறுப் பாகவும், சிலவிடத்தில் உண்ணா நோன்பாகவும், இன்னோ ரன்ன பிற வழிகளாகவும் சத்தியாக்கிரகம் எழும்.'”

சத்தியாக்கிரகங்களின் வகைகளைப் பற்றி எவ்வளவு தெளிவாகக் கூறிவிட்டார்!


காந்தியடிகள் பொறுமையைப் போதித்தாரே அதைத் தம் வாழ்க்கையில் கடைப்பிடித்தாரா?

இது அடுத்த ஆராய்ச்சி. பொறுமையைக் கடைப்பிடித் தார். இதற்கு பெருந்துணை செய்த கலங்கரை விளக்கு ஏசுவின் போதனையே.

‘நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப் படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளிகள் என்று தீர்க்காதிருங்கள்.”*

இப்போதனையைத் தம் வாழ்நாளில் காந்தியடிகள் கடைப்பிடித்த சம்பவங்கள்தான் எத்தனை, எத்தனை!

ஜெனரல் டையர், பஞ்சாப் படுகொலையை நடத்திய வெறிபிடித்த வெள்ளையர். மற்ற காங்கிரஸ் தலைவர்கள் காந்தியடிகளுடன் சேர்ந்து இச்செயலை வன்மையாகக் கண்டித்தனர். ஜெனரல் டையருக்கு இதே போன்ற கடும் தண்டனை கொடுத்தே தீரவேண்டும் என்று வற்புறுத்தினர்.

ஆனால் காந்தி என்ன சொன்னார்?

  • li*. நசtச-மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும் * மத்தேயு சுவிசேஷம், அதிகாரம் 7 (புதிய ஏற்பாடு).

207