பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்போதும் போல் கைது, விசாரணை எல்லாம் நடந்தன. ஆனால் ஒரு புதுமை!

மாஜிஸ்திரேட் தீர்ப்பு சொல்லாமல் விடுத்தார்!

என்ன ஆச்சரியம்? ஏன்? காந்தியடிகள் மீது பிறப்பிக்கப்பட்ட கட்டளையை விலக்கும்படி மாஜிஸ்திரேட்டுக்கு ஆணை விடுத்தது அரசாங்கம்.

அத்துடனா? சாம்ப்ரான் தொழிலாளர் துன்பங்களை விசாரணை புரியும் உரிமையையும் பெற்றார் அண்ணல்.’

ஆன்மீகத்தின் வலிமைக்கு இஃது ஒர் சான்று.

உண்மை என்றும் வெல்லும் என்பதற்கோர் எடுத்துக் காட்டு,

வரிகொடாமை இயக்கம்

பம்பாயில் உள்ளது கெய்ரா எனும் ஜில்லா. இங்கு இயற்கையின் சீற்றம் காரணமாக விளைச்சல் மிக மிகக் குறைந்தது.

வரி திரட்டும் அதிகாரிகள் இதைப் பொருட்படுத்தவே இல்லை. எவ்வித சலுகையும் கொடுக்க மறுத்தனர்.

‘விளைச்சலுக்குத் தக்கவாறு வரி வசூலிக்க வேண்டும்’ என்று அரசாங்கத்தை வேண்டினார் அண்ணல். நடந்த தென்ன?

அரசாங்கம் இவர்தம் வேண்டுகோளை உதாசீனம் செய்தது. செவி சாய்க்கவும் மறுத்தது.

  • விரிவு-மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும் ,

பக் க.அ0-காண்க

31 0