பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு வழி நியாயத் தீர்ப்புக்கள் மேனாட்டு நீதிக்கு இடங் கொடுத்து ஒதுங்கின. இவை இயற்கைக்கு-நம் நாட்டு இயற்கைக்கு-மாறானவை,

மாறுபட்ட இத்துறைகளை ஒதுக்கும்படி செய்தார் அண்ணல். ‘சட்டசபையை விலக்குங்கள்; அயல் நாட்டுத் துணிகளை வாங்காதீர்கள்; அயல்நாட்டுக் கல்வியை விட் டொழியுங்கள்!’ என்று அறைகூவல் விடுத்தார்.

நாட்டுக் கல்லூரி, நாட்டு பஞ்சாயத்து, காங்கிரஸ் சபை என்ற மூன்று அமைப்புக்களையும் ஆங்காங்கே அமைத்தார் அடிகள்.

விளைவு என்ன?

நாடெங்கும் ஒத்துழையாமை இயக்கம் தியெனப் பரவியது; வெள்ளையரை நடுக்குறச் செய்தது.

இராட்டைச் சுற்றும் சத்தம் அராஜகத்தைப் பக்க பக்கமாக விரட்டியது.

அண்ணலின் சொற்படி, “கதர் அணிதல் ஒரளவு சிறை மீட்சி; தீண்டாமை விலக்கல் மற்றொரளவு; சட்ட சபை விலக்கு இன்னொரளவு. *

மனத் துய்மைக்கும், அன்புக்கும், அருளுக்கும் சான்றாக அமைதி அணங்கு நடம் புரியத் தொடங்கினாள்.

அரசியலில் சத்தியாக்கிரகம்

அரசியல் போரில் சத்தியாக்கிரகத்தை நுழைத்தவர் நம் காந்தியடிகள் ஆவார்.

சத்தியாக்கிரகங்கள் ஒவ்வொருவரும் ஏற்க வேண்டிய நோன்புகளையும் முறைகளையும் வகுத்தார்; அனைவரும் கடைப் பிடித்தொழுகவும் செய்தார்.

  • பக்.ச.உo, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்.