பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோன்பின் கூற்றா? என்று நையாண்டி செய்தனர் குற்றங் காண்போர்.

ஆண்டுரூஸ் என்பவர் ஒரு வெள்ளைக்கார அறிஞர். அவர் அடிகளின் இரு செய்கைகளுக்குக் கண்டனம் தெரி வித்தார்.

ஐரோப்பாவில் பெரும் போர் மூண்டது. காந்தியடிகள் கெய்ரா ஜில்லாவில் ஆங்கிலேயர்க்கென படைத் திரட்டி னார். ஆங்கிலேயர் ஈடுபட்ட இந்த போருக்கு நாம் ஆள் திரட்ட வேண்டுமா? வெள்ளையர் யார்? நம்மை அடிமைப் படுத்தி, அதிகாரம் செலுத்துபவர். நமக்கு உரிமைகளைக் கொடாமல் நம்மை மோசமாக, கீழ்த்தரமாக நடத்து பவர். இவர்களுக்காக நம் நாட்டு உயிர்களைப் பலியிட வேண்டுமா என்பது மற்றொரு வாதம்.

அந்நியத் துணிகளை தீக்கிரையாக்கினார் ஒத்துழை யாமை இயக்கத்தின் போது. தீக்கிரையாக்குதல் விரும்பத் தக்கதா? அது அழிவு சக்தியின் கொடுரம் அல்லவா? ஆக்க சக்தி அல்லவே! அடிகள் இதற்கென்ன சமாதானம் கூறு கிறார் பார்ப்போம் என்று தருவியவர் பலர்.

காந்தியடிகள் இவைகளுக்குக் கூறிய விடை யாது?

காந்தியடிகள் இவைகளுக்குப் பதிலளித்து தெளிவு படுத்தினரா என்றால் இல்லை. அடிகளின் செய்கைகளை ஆதரித்த ஒரு சிலரில் ஒருவர் தமிழ்க்கடல்.

அடிகள் தம்மைப்பற்றி என்ன கூறுகிறார்?

“நான் தவறுகள் மலிந்த சாதாரண மனிதன்’ என்று ஒத்துக் கொள்கிறார்.

இது, தவற்றை சரியாக்கி விடுமா? இல்லை, பதுங்கல் (escapism) தந்திரமா? இல்லை, இரண்டும் இல்லை.

தவறும், மெய்யும் சூழ்நிலையைப் பொருத்திருக்கும்.

214