பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறி நாய்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாது காப்புகள் பற்றி யங் இந்தியாவில் வெளிவந்த கட்டுரைகள் பல; பற்பல; இவை ஒன்றுமே செய்ய இயலாத இடத்தில், நேரத்தில் அவைகளால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும். எத்தகைய ஆபத்து? வெறிநாய் கடியுண்டு மனிதர்கள் இறப்பார்கள். இத்தகைய சூழ்நிலை ஏற்படின், அவை களைக் கொல்லலாமென்றும் விரிவாக யங் இந்தியாவில் விவரித்துள்ளார்.

இந்த முடிவின் அடிப்படை இரக்கமே. இரக்கமே அகிம்சை என்பது திரு. வி. கவின் வாதம்.

இதுதான் போகட்டும். கன்றுக்குட்டிக்கு நஞ்சிறக்கிக் கொல்வித்தது சரியா? அது எந்த மனிதரையும் கடித்துத் துன்புறுத்தவில்லையே?

இது எதிர்வாதம் புரிவோர் கூற்று.

கன்றுக்கு நஞ்சிறக்கிக் கொல்விக்க அடிகள் வந்ததேன்? அதன் நிலை யாது என்று ஆராய முனைவரேல், குறை கூறு வோர் வாயடைத்துப் போவர்.

கன்றின் நிலையை நினைத்துப் பாருங்கள். நோய்வாய்ப் பட்டிருந்தது அது. நோய் என்றால் சாதாரண நோயா? அணு அணுவாக அதனை சித்திரவதை செய்யும் கடுந்நோய். படுக்கையிலே அதைத் தள்ளியது அதன் கொடுமை. உறுப்புக்களில் புழுக்கள் நெளிந்தன. ஒவ்வொரு நொடியும் சொல்லொணா வேதனைப்பட்ட அக்கன்றினைச் சற்று நினைத்துப் பாருங்கள்.

இதன் வேதனையைக் குறைத்து உய்விக்க எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள் எத்தனை! அதற்குச் சிகிச்சை செய்ய வந்த மருத்துவர்கள் தாம் எத்தனை, எத்தனை!

கன்றின் வேதனைக்கு மாற்றம் வந்ததா? பலன்? ஒன்றுமில்லை! ஒன்றுமே இல்லை! தீராத நோய்க்கு மருந்து

to 1 5