பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்கும் என்ற காரணங்கள், விரிவுரை ஆராய்ச்சிக்கு அடிகோலின.

இவையெல்லாவற்றையும் விட, உலகிலுள்ள எல்லா கேடுகளுக்கும் மருந்து என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவர் திரு. வி. க. ‘யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவே என்ற பரந்த நோக்கொடு, இவ்விரிவுரை ஆராய்ச்சியில் ஆழ்ந்தார்; வெளியிட்டார்.

தமிழ்த் தென்றலை ஈர்த்தது திருக்குறளின் அதிகார அமைப்பு. திருவள்ளுவம் முப்பால் கொண்டது.அறத்துப்பால் பொருட்பால், இன்பப்பால் என்று மட்டுமே பிரித்தார் திருவள்ளுவர். வீட்டின் பாலை விடுத்தார். ஏன்?

அறத்தால் பொருள் ஈட்டி, அறவாழ்க்கை வாழ்ந்தால் இன்பம் வரும். இந்த அறவழி இன்பம் வீடு பேற்றைத் தானே நல்கும். வீடு தனித்த ஒன்று அல்ல. இல்லற வாழ்க்கையே அற வாழ்க்கையின் அஸ்திவாரம். எனவே வள்ளுவர் பெண்பாலாரைத் துாற்றினார் இல்லை; துறந்தவரைப் போற்றினார் இல்லை. திரு. வி. கவோ ‘பெண்ணினத்தின் வீழ்ச்சி ஆணினத்தின் வீழ்ச்சி’ என்ற திடமான கொள்கையுடையவர். இல்லறமே நல்லறம் என்ற ஆணித்தரமான எண்ணமுடையவர். போலித் துறவறம் தேவையில்லாத ஒன்று: கடமைகளை ஒதுக்கிவிட்டு ஓடி ஒளியும் கோழைத்தனம் என்று ஒதுக்கியவர்: கண்டித்தவர்.

துறவறத்தை இல்லறத்திலே மேற்கொண்டொழுகிய முனிவர்கள் எத்தனை, எத்தனை! நாயன்மார்கள் எத்தனை எத்தனை! இந்த சந்தர்ப்பத்தில் காந்தியடிகளை மறக்கலாமா?

பிற தூண்டுதல்கள்

திரு. வி. க நக்கீரர் கழகச் சார்பில் நடத்திய திருக்குறள் வகுப்புகளும், பின்னர் திருவல்லிக்கேணி தியோசாபிகல் சங்கத்தில் நடத்திய திருக்குறள் வகுப்புகளும், அதன் பின்

9