பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலை தூக்கி விடுமோ என்ற பீதி எங்கும் இருந்தது. இந்த வெறி திடீரென பீறிட்டு எரிமலையாக வெடிக்கலாம்; எரிமலை வெடித்தால், ஏற்படும் விளைவு அழிவு; பெரும் அழிவு. இந்த வெறி வடிய வடிகால் ஏற்படுத்தி விட்டால், பகை பறந்து போகும், உயிர்ச்சேதம் இல்லா வடிகால் எது? அன்னியத் துணிகளை தீக்கிரையாக்குவதைத் தவிர சிறந்த தொன்றில்லை. எனவே தம் செய்கை தவறே அல்ல என்றாரி அடிகள்.

இவ்விடை ஆண்டுரூஸ்-க்கும் தாகூருக்கும் பிடிக்க வில்லை. வார்த்தை சாலம்’ என்று கருதினார்கள். அடிகள் போற்றிய அம்மையார்கள்

1896 ஆம் ஆண்டு. நவம்பர் மாதம். இராய்ட்டர் பத்திரிகை அண்ணல் காந்தியின் பிரசாரத்தைத் திரித்துக் கூறியது; ஆதாரமற்ற புளுகுகளைச் சேர்த்துப் பொய்யுரை களை விடாது பிரசுரித்து, வெள்ளையரிடை தவறான கருத்துக்களைப் பரப்பியது. வெள்ளையர் வெகுண்டனர். அண்ணல் காந்தி தென்னாப்பிரிக்கா வந்தவுடன் என்ன செய்தனர்?

மூர்க்கத்தனமாக அடிகளை அடித்தனர்? வரம்பு மீறி நையப் புடைத்தனர். மெய்மறந்து செயலிழந்து வீழ்ந்தார் அண்ணல். அப்போதும் அடிகள் வேகமாக விழுந்தனவே யன்றி குறையவில்லை.

ஆனால் அக்கணம் தம்மை அறியாது நிறுத்தினர் வெள்ளையர், ஏன்? எதிரே நின்றார் ஒர் அம்மையார். அவரைக் கண்டதும் அக்கூட்டம் மரியாதையாக விலகியது. அந்த அம்மையார் யார்?

ஆங்கில போலீஸ் சூப்ரிண்டென்டெண்ட் அலெக் சாண்டர் அவர்களின் துணைவியாரே.

ஆங்கில அம்மையார்; காத்தார் யாரை? ஒரு கறுப்பரைதம் இனத்தவர் சீற்றத்தினின்று பாதுகாத்த இவர், தெய்வம் அன்றோ?

21 7