பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயச் செய்யுளன்றி, அரசியற் செய்யுளாளி ‘அருளுடைமையும் பொருளுடைமையும் பிறந்தது அவர் முதிய வயதில்தான். கண்ணொளி பட்டதுங் கருத்தோளி முன்னிலும் விளங்கியது தமிழ்த் தென்றலுக்கு.

அந்நூல்களின் அமைப்பையும் தெளிவையும் வளர்ச்சி யும் வாழ்வும் இல் உள்ள செய்யுளே விளக்கும்.

போரை ஒழிக்க போரில் இறங்கினோம் குண்டைத் தொலைக்க குண்டை எறிந்தோம் வாளை வீழ்த்த வாளை ஏந்தினோம் விளைந்தது என்னை? அளந்து பார்க்க

சிவனருள் வேட்டல்

எல்லாவற்றையும் கடந்து நிற்பதே கடவுள். அவருக்குப் பேர் கிடையாது. ஆனால் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பெயரை வைத்துத்தான் அவரைக் குறிக்கின்றனர். இறைவனை சிவன் என்று புலவர்கள் அழைத்து விட்டனர். எனவே நம் ஆன்றோர் வழியில், முன்னோர் வழியிலும் நின்று தானும் அவனை அப்படியே அழைப்பதாகச் சொல்கிறார் திரு. வி. க சிவனருள் வேட்டல் செய்யுள் நூலில்.

மேலும் சிந்திக்கிறார். எங்கும் நிறைந்த நீக்கமற இருக்கும் அச்சக்தியைக் காண்கிறார்.

‘நீ உருவமுடையவன் அல்லன். அருவனும் அல்லன். உனக்கு ஆதியும் இல்லை. அந்தமும் இல்லை. அகண்ட சூனியத்திலும் நீ இருக்கிறாய்; ஒளியிலும் இருக்கின்றாய். எங்கும் நிறைந்திருக்கும் உன்னை எப்படித்தான் நினைப்பது?”

‘முருவு முன்னைப் படைப்பதெது? மாண்புடைய

சிவமே மன்னுமுன்றன் பாழ்வெளியில் மாகிலங்களெல்லாம்

223