பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது சரி, மதமில்லை என்றால் வேறு மாற்றமேது? மாற்றமா? உண்டு.

கடமாடும் கோயிலுக்கு கலம்புரிதல் வேண்டும். நடமாடுங் கோயிலா? அது எது?

நாம் வாழும் உலகிலுள்ள உயிர்கள் அனைத்துமே நட மாடுங் கோவில்களே. அவைகளுக்கு உதவ வேண்டும். எவ் வாறு உதவ வேண்டும்? சரி உதவுகிறோம். அதனால் நமக்கு என்ன ஆதாயம்?

உதவுதலுக்கு கைம்மாறு எதிர்பார்த்தால், அது உதவி யாகுமா? ஆகவே, ஆகாது. பின் என்னதான் செய்வது?

அனைவருக்கும்-வேற்றுமையின்றி சமமாக உதவி செய். பணி செய்தால்? பயன் கருதாது பணி செய்’ என்பதையே வலியுறுத்துகிறார். இந்தக் கருத்தை ஆணித் தரமாக, “நடமாடும் கோவில்’ என்ற சொற்கள் மூலம் வற்புறுத்துகிறார்.

இப்படிச் செய்ய முடியுமா? செய்தால் கடவுள் நெறி பின்பற்றியவர்கள் ஆவோமா? இது அடுத்த ஐயம். பின்பற்றியவர்கள் ஆவோம். எப்போது? “நான் என்ற அகந்தை அகன்றால்; அத்துடனா? மனத்தாலும் பாவம் செய்வதை ஒழித்தால்......

‘கான் அழிந்து தொண்டுசெயும் ஞானமதே

வேண்டும்; ”

வேறு என்ன செய்ய வேண்டும்?

‘‘கொடிய கொலை புலைதவிர்க்குங் குணம்பெருகல் வேண்டும்: ‘

ரொம்ப சரி. இதை இரண்டுமே செய்து விடுவோம். உடன், அருள் கிடைத்து விடுமன்றோ?

225