பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த அறிவு ஒளி வீசினால்? மனத்தில் அமைதி ஏற்படும்: நிலைத்து நிற்கும்.

மனத்தில் அமைதி ஏற்பட்டால் என்னாகும்?

மனத்தில் அமைதி ஏற்படின் நினைப்பு தானாகவே துய்மையாகும். தூய்மை என் செய்யும்? தூய மனத்தில் அறிவுச் சுடர் பிரகாசமாக எரியும். அதன் ஒளி அறியாமையை போக்கும்; மக்களின் விலங்குத் தன்மையை விலக்கும்; விரட்டும்; ஒழித்துக் கட்டும். மெய் நெறி பிறக்கும்.

இதைக் கூறும் அவர் செய்யுளைப் பார்ப்போமா?

‘முன்னோர் மொழியைப் பொன்னேபோல் போற்றுக

அன்னவர் செம்மொழி மன்னிவானில் ஒலியாய்ப் படிந்தே உலகை ஒம்பலை உன்னி உன்னிப் பன்முறை உன்னுக: தெளிவுண் டாகும்; ஒலியுண்டாகும்: முளைப்பறுங் தொழியும்; கினைப்புத் துண்யதாம்: அங்கினைப் புடையார் கன்மொழி அமிழ்தம் இடையி டின்றித் தொடர்ந்து வழிவழிப் பெய்து பெய்து மெய்க்நெறி காக்கும்;’*

நவ நாகரீக இளம் வயதுடைய மக்களிடை அமைதி யின்மை ஏற்படுவது ஏன்?

பலர் பற்பல கருத்துக்களைக் கூறுவர்.

அவர்கள் அறிவுக்குத் தக்க வேலையில்லை என்பது பெரும்பான்மையோர் கூற்று.

படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை! எனவே அல்லல், அவதி, அமைதியின்மை!!

வேலையில் உள்ளவர்களுக்கோ வேறு தொல்லைகள். தொல்லைகள் ஏன்? அமைதிக் குறைவு ஏன்?

  • முதுமை உளறல், பக். 48.

228